அலிபாபா தளத்தில் ரூ. 99 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வந்த எலெக்ட்ரிக் கார்.. டாடா நானோவைவிட கம்மி விலையா இருக்கே!

நம்ப முடியாத மலிவு விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஒன்று சீன சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் சிறப்புகள் என்ன? முழு சார்ஜில் எத்தனை கிமீ தூரம் வரை டிராவல் செய்யும்? அதன் உண்மை விலை என்ன? என்பது போன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல ஆன்லைன் வர்த்தக (e Commerce) தளமான அலிபாபா (Alibaba) அண்மையில் 'எலெக்ட்ரிக் வெயிக்கிள் ஆஃப் தி வீக்' (Alibaba Electric Vehicle of the Week) எனும் தலைப்பின்கீழ் பிரத்யேகமாக மின்சார கார் (Electric Car)-களை அதன் தளத்தில் விற்பனைச் செய்தது.

Alibaba electric car

இந்த நிகழ்விலேயே இருசக்கர வாகனங்களின் விலைக்கே டஃப் கொடுக்கின்ற அளவிற்கு மிக மலிவான விலையில் ஓர் எலெக்ட்ரிக் விற்பனைக்கு வந்தது. அந்த வாகனம் நகர்புற பயன்பாட்டிற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குட்டியான எலெக்ட்ரிக் காராகும். இரண்டு பேர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் இரு இருக்கை அமைப்பை மட்டுமே அது கொண்டிருக்கும்.

இதுதவிர இன்னும் பல சுவாரஷ்யமான வசதிகளை இந்த வாகனம் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, எலெக்ட்ரிக் காரின் முகப்பு பகுதி புலியின் முகத்தைப் போலவும், அதன் கிரில் ஸ்மைல் செய்வதைப் போலவும் இருக்கின்றது. இத்தகைய காருக்கு 1,199 அமெரிக்க டாலர்களே விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Alibaba electric car inside

இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை வெறும் 99,126 மட்டுமே ஆகும். இது டூ-வீலர்களுக்கே டஃப் கொடுக்கும் விலை ஆகும். இந்த அளவு அடிமட்ட விலையிலேயே சீன சந்தையில் இந்த இரட்டை இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் பலரை ஆச்சரியத்திலும், வியப்பிலும் மூழ்க செய்திருக்கின்றது. இப்படி ஒரு சீப்பான எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் அனைத்து டூ-வீலர் உற்பத்தி நிறுவனங்களும் அதன் உற்பத்தி ஆலையை இழுத்து மூடிவிட்டுதான் சொந்த ஊருக்கு போக வேண்டி இருக்கும்.

Alibaba electric car side profile

இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதற்காக எலெக்ட்ரிக் காரில் 35 kW திறன் கொண்ட மின் மோட்டார் அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் காரில் 152 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.

இந்த ரேஞ்ஜ் திறன் நகர்புற பயன்பாட்டிற்கு போதுமானது ஆகும். குறிப்பாக, அலுவலகம் சென்றுவதற்கு இந்த வாகனம் பெறும் உதவியாக இருக்கும். அதேநேரத்தில், லாங் டிராவல் இதில் செய்வது சற்று கடினமானது. அதுவே, அதிக ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக் இதில் ஆப்ஷனாக வழங்கப்படும் எனில் நீண்ட தூர பயணத்தைக்கூட இதில் அசால்டாக செய்துவிட முடியும்.

காருக்குள் பெரிய அளவில் ஆடம்பரங்கள் வழங்கப்படவில்லை. அதேவேளையில், ஏசி வெணஅடுகள் கவர்ச்சியான ஸ்டியரிங் வீல், டேப் போன்ற பெரிய திரைக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இருவர் சொகுசாக அமர்ந்து பயணிப்பதற்காக மிருதுவான இருக்கைகள் உள்ளிட்டவை இந்த மலிவு விலை இ-காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. காரின் வெளிப்புற பேனல் அலுமினியம் மற்றும் ஃபைபரால் தயாரானது என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாதாரணமான எலெக்ட்ரிக் டூ-வீலரே ரூ. 80 ஆயிரம் - ரூ 1 லட்சம் என உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற நிலையில், சீனாவில் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றதா என்றே பலரை இந்த தகவல் வாயை பிளக்கச் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 31, 2023, 12:47 [IST]
English summary
2 seater cheapest alibaba electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X