என்னதான் மாருதி அதிகமா காரை வித்தாலும் இந்தியர்கள் கிரெட்டா காரை தான் விரும்புறாங்க! ஆய்வில் புது தகவல்
இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இந்திய மார்கெட் பெரிதாகப் பெரிதாக மக்கள் எந்த வகையான வாகனங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்ற விஷயமும் மாறிக்கொண்டே இருக்கிறது.
இதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்துள்ளது. அதிகமாக விற்பனையாகும் கார்களில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை கார்கள் மாறிக்கொண்டே இருந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஆட்டோமொட்டிவ் இ-கமர்ஸ் இணையதளம் மற்றும் டெக்னாலஜி, டேட்டா சயின்ஸ் நிறுவனம் அந்நிறுவனத்தின் வருடாந்திர ரிப்போர்ட்டை தயார் செய்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் இ-காமர்ஸ் ரிப்போர்ட்-2022 என்ற பெயரில் இந்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்த ரிப்போர்ட்டின் படி இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்புவது ஹூண்டாய் கிரெட்டா மற்றும் பஜாஜ் பல்சர் ஆகிய வாகனங்களைத் தான் எனத் தெரிவித்துள்ளது. விற்பனையில் மாருதி தான் நம்பர் ஒன் இடத்திலிருந்தாலும் இந்த ஆய்வில் ஹூண்டாய் காருக்கு நம்பர் 1 இடம் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வில் இரண்டாவது இடம் கியா செல்டோஸ் காருக்கும், 3வது இடம் மாருதி பிரெஸ்ஸா காருக்கும் கிடைத்துள்ளது. 4 மற்றும் 5வது இடத்தை டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் சொகுசு கார்களுக்கான தனியாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சொகுசு கார்களிலேயே மக்கள் அதிகம் விரும்புவது மெர்சிடீஸ் பென்ஸ் இ- கிளாஸ் கார் தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஜீப் காம்பஸ் காரும், 3வது இடத்தை பென்ஸ்- சி கிளாஸ் காரும், 4வது இடத்தை பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் காரும், 5வது இடத்தை பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 காரும் பெற்றுள்ளது.
இந்தியர்கள் சராசரியாக ஒரு காரை ரூ11,99,107 மதிப்பில் வாங்குகிறார்கள் என்றும், இதுவே சொகுசு காரை 42,91,470 என்ற விலையில் வாங்குகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு கார்களக்கு மட்டும் நடக்கவில்லை டூவீலர்களுக்கும் நடந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகளைக் காணலாம் வாருங்கள்.
இந்த ஆய்வின்படி இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பும் பைக் என்றால் பஜாஜ் பல்சர் பைக் தான். இது தான் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், 3வது இடத்தை பஜாஜ் பல்சர் என்எஸ் பைக், 4வது இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் மற்றும் 5வது இடத்தை ஹோண்டா சிபி ஷைன் பைக் ஆகியன இடம் பிடித்துள்ளன.
இதே ஆய்வில் ஸ்கூட்டர்களுக்கான தனியாகப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா 5ஜி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தாக சுஸூகி ஆக்சஸ் இரண்டாவது இடத்தையும், டிவிஎஸ் ஜூபிட்டர் மூன்றாவது இடத்தையும், ஹோண்டா டியோ 4வது இடத்தையும் பிடித்துள்ளது. சூப்பர் பைக்குகளுக்கு தனி பட்டியல் இருக்கிறது.
இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் பைக் தான் அதன் பின்னர் இரண்டாவது இடத்தை ஹார்லிடேவிட்சன் ஸ்டிரீட் ராட் பைக்கும், மூன்றாவது இடத்தை கவாஸகி நின்ஜா இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கும், 4வது இடத்தை கவாஸகி நின்ஜா பைக்கும், இறுதியாக பென்னல்லி டிஎன்டி 300 பைக் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
பைக்குகளின் விலையைப் பொருத்தவரை ரூ55,037 என்ற சராசரி விலையில் இந்தியர்கள் பைக்கை வாங்குகிறார்கள். ஸ்கூட்டரை ரூ46,500 என்ற விலையில் வாங்குகிறார்கள். சூப்பர் பைக்குகளை பொருத்தவரை ரூ6,93,582 என்ற விலையில் வாங்குகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பெட்ரோல் கார்களே மக்களின் முதல் தேர்வாக இருக்கிறது என்றும், அடுத்தாக சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆப்ஷன் கொண்ட கார்கள் இரண்டாவது தேர்வாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அது மட்டுமல்ல சமீப காலமாக ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் மைலேஜ் மற்றும் சுலபமாகக் கையாளும் தன்மைக்காக அந்த கார்களின் வாங்குபவர்கள் சதவீதம் 23ல் இருந்து 33 ஆக உயர்ந்துள்ளது. எனத் தெரிவித்துள்ளது.
அடுத்தாக எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை ஒட்டு மொத்த விற்பனையில் 1 சதவீதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கார் ஸ்கிராப்பிங் பாலிசியாக 10 ஆண்டுகள் பழமையான வாகனம் ரோட்டில் ஓட அனுமதியில்லை என்பதால் டீசல் வாகன பயன்பாடு 60 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து டிரூம் நிறுவனத்தின் நிறுவனர் சந்தீப் அகர்வால் கூறும் போது : " ஆட்டோமொபைல் டிரண்ட் ரிப்போர்ட் 2022 மூலம் ஆன்லைனில் மக்கள் வாகனங்களை வாங்குவது அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது வருங்காலத்தில் மேலும் அதிகமாகும். குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பல அறிமுகமாகும் போது அதை ஆன்லைனில் மக்கள் புக் செய்து வருகின்றனர். இதனால் படிப்படியாக இது அதிகமாகும்" எனக் கூறினார். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








