சொகுசு காருனு ஒன்னு வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... அழகு, வேகம்னு எல்லாத்துலையும் வேற லெவல்!
2023 ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வழக்கமான க்யூ3-யைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் நிறைந்த ஓர் சொகுசு காராக இது உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
203 ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுகமாக இந்த சொகுசு காருக்கு ரூ. 51.43 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். உலக நாடுகளில் பல்வேறு ட்ரிம்களில் இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றநிலையில், இந்தியாவில் அதன் ஒற்றை வேரியண்ட் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரே ஒரு ட்ரிம்தான் அறிமுகம்
டெக்னாலஜி பிளஸ் எஸ் லைன் எனும் ஒற்றை ட்ரிம்மில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான ஆடி க்யூ3 (ஸ்போர்ட்பேக் அல்லாத க்யூ3) உடன் சேர்ந்து இந்த தயாரிப்பும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. தற்போது, வழக்கமான மாடலான ஆடி க்யூ 3 பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி எனும் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இவற்றை உருவாக்கி வரும் அதே ஆர்கிடெக்சரை பயன்படுத்தியே ஆடி க்யூ 3 ஸ்போர்ட்பேக் ட்ரிம்மும் உருவாக்கப்படுகின்றது. இருப்பினும், இதன் வெளிப்புற தோற்றம் மற்றும் எஞ்ஜின் விஷயத்தில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. ஸ்லோப்பிங் ரக ரூஃபிலேயே ஆடி க்யூ 3 ஸ்போர்ட்பேக் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மேற்கூரை கூபே தோற்றத்தை க்யூ3 ஸ்போர்ட்பேக்கிற்கு வழங்குகின்றது.

கண்கவர் அம்சங்கள் ஏராளம்
இதுதவிர மிகவும் கட்டுமஸ்தான தோற்றத்தை வழங்கும் விதமாக இந்த காரின் மற்ற பாடி பேனல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், வழக்கமான ஆடி க்யூ3-யைக் காட்டிலும் இது மிகவும் கவர்ச்சியானதாகவும், முரட்டுத் தனமானதாகவும் காட்சியளிக்கின்றது. இதுதவிர இன்னும் பல கண்கவர் மற்றும் மனம் கவர் அம்சங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில், 18 அங்குல 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இத்துடன், ஷார்ப்பான தோற்றம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், இடைவெளிகள் கொண்ட ஹெக்ஸோகனல் கிரில் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, பம்பர்களும் புதிய ஸ்டைல் கொண்டதாகவே 2023 ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் விற்பனைக்குக் கிடைக்கும்.

இத்தனை நிற தேர்வுகள்ல கிடைக்குமா!
டர்போ ப்ளூ (Turbo Blue), கிளாசியர் ஒயிட் (Glacier White), க்ரோனோஸ் கிரே (Chronos Grey), மிதோஸ் பிளாக் (Mythos Black) மற்றும் நவர்ரா ப்ளூ (Navarra Blue) ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இதுதவிர உட்புறத்திற்கான இரண்டு நிற தேர்வுகளையும் ஆடி வழங்குகின்றது. ஓகபி பிரவுண் (Okapi Brown) மற்றும் பியர்ல் பீஜ் (Pearl Beige) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.
சிறப்பம்சங்கள் மிக ஏராளம்
இதோட இந்த காரின் சிறப்புகள் முடியவில்லை. இன்னும் பல்வேறு ஈர்க்கக் கூடிய வசதிகளை க்யூ 3 ஸ்போர்ட்பேக் சொகுசு காரில் ஆடி வழங்கி இருக்கின்றது. இலுமினேட் ஸ்கஃப் பிளேட்டுகள், 30 வண்ண ஆம்பியன்ட் லைட்டுகள் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

கூடுதல் சிறப்பு வசதிகளாக 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்சுவல் காக்பிட் பிளஸ் அம்சம், 180 வாட் திறன் கொண்ட 10 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பார்க்கிங் எய்ட் பிளஸ், 6 ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவ்ளோ சீக்கிரத்திலேயே 100 கிமீ வேகத்தை எட்டிடுமா?
இதுபோன்ற அம்சங்களிலேயே ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இதன் உட்பக்கமும், வழக்கமான ஆடி க்யூ 3 இன் உட்பக்கமும் ஒரே மாதிரியானதாக இருக்கும். பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 190 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இத்துடன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. வழக்கமான க்யூ3-யைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட வெர்ஷனாகக் காட்சியளிக்கின்றது. வெறும் 7.3 செகண்டுகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டதே இது ஆகும்.


Click it and Unblock the Notifications









