கொரோனாவிற்கு பிறகு நடந்த அதிசயம்! மாருதியை விடுங்க ஆடி, பிஎம்டபிள்யூ கூட குஷியில இருக்காங்க!

2023 ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு பம்பரான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். கார் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 42.2 லட்சம் கார்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த ஆண்டு முடிவடையும்போது சரியான விற்பனை விபரங்கள் எல்லாம் தெரியவரும். அதிக எண்ணிக்கையில் கார்களை விற்க இந்த மாதம் பல நிறுவனங்கள் பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக மாருதி நிறுவனமும் அதை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சொகுசு கார்களுக்கான தேவையும் இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஆகிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

2023 Car Sales Details

குறைந்த விலை கார் தயாரிப்பாளர்களும் சொகுசு கார் தயாரிப்பாளர்களும் ஒரே கொள்கையில் தான் இருக்கின்றனர். அவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவில் இருக்கின்றனர். தற்போது இந்தியாவில் டாடா டியாகோ இவி, எம்ஜி கோமெட் இவி, ஆடி க்யூ8, பிஎம்டபிள்யூ ஐ7 போன்ற கார்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வெர்ஷனில் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. எலெக்ட்ரிக் டூவீலர் தான் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்று வருகிறது.

2023 ஆம் ஆண்டு எலெக்ட்ரிக் டூவீலர் செக்மென்ட்டில் பல முக்கிய அறிமுகங்கள் இருந்தன. முக்கியமாக டிவிஎஸ் எக்ஸ், அல்ட்ரா வைலட் 77, உள்ளிட்ட ஏகப்பட்ட வாகனங்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த விற்பனை ஏறுமுகம் 2024 ஆம் ஆண்டு தொடருமா? இது தொடர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்தடிரெண்டிற்கான காரணம் என்ன உள்ளிட்ட விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2023 Car Sales Details

சொகுசு வாகன செக்மென்ட் என்பது கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் சிறப்பாக வளர்ந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை இலக்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. இதே வளர்ச்சியை 2024-ம் ஆண்டு தொடர வாய்ப்புள்ளது. 2024-ம் ஆண்டு சொல்லப்போனால் 2023-ம் ஆண்டு விட அதிகமான விற்பனை பெற வாய்ப்பு இருக்கிறது. வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வகையான வாகனங்களை பல்வேறு விதமான தொழில்நுட்பங்களை 202-ம் ஆண்டு களம் இறக்க திட்டமிட்டுள்ளன.

புதிய தயாரிப்புகள் வருகிறது என்றால் தானாக அங்கு விற்பனை வளர்ச்சி என்பது ஏற்படும். அப்படியாக 2024 ஆம் ஆண்டு சிறப்பான விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் எலெக்ட்ரிக் வாகன செக்மென்ட்டும் மிக சிறப்பான வளர்ச்சியை 2023ம் ஆண்டில் பெற்றுள்ளது.

2023 Car Sales Details

கடந்த 11 மாதத்திலேயே 50 சதவீத வளர்ச்சியை பெற்றுவிட்டது. டூவீலர், 3 வீலர், பயணிகள் கார், கமர்சியல் மற்றும் பஸ்கள் என தொடர்ந்து அனைத்து செக்மெண்டும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. 2024 ஆம் ஆண்டும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாவதால் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதம மந்திரி இ-பஸ் திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்க அரசு முனைப்பு காட்டி வருவதால் அடுத்த ஆண்டு சுமார் 10,000 பஸ்கள் கள மிறங்க உள்ளன. 169 நகரங்களில் இந்த பஸ்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அரசும் தனியார் சேர்ந்து இந்த பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சொகுசு கார்களின் விற்பனை என்பது சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

2023 Car Sales Details

ஆடி நிறுவனத்தை பொறுத்தவரை முதல் 9 மாதத்திலேயே 88 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. சொகுசு வாகனங்களில் விற்பனை அதிகமாகவது என்பது இந்திய அளவில் மக்களிடம் நல்ல பணப்புழக்கம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. முக்கியமாக ஆடி க்யூ3 ஸ்போர்ட் பேக் மற்றும் க்யூ8 ஸ்போர்ட்ஸ் இட்ரான் ஆகிய கார்களின் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது.

அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன உலகில் பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பாலிசி சப்போர்ட் இருப்பதால் பல நிறுவனங்கள் பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம் போன்ற வாகனங்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகன உலகிலும் சில புரட்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்த 2023-ம் ஆண்டு விற்பனையை வைத்து 2024-ம் ஆண்டு எப்படி இருக்கும் என கணிக்கும் போது அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் ஹேஷ்பேக் செக்மென்ட் விற்பனையில் சரிவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த செக்மெண்டில் உள்ள கார்களின் விற்பனை விலை அதிகமாவது காரணமாக, முதல் தலைமுறை கார் வாங்குபவர்கள் தங்கள் கார் கனவை தள்ளிப் போட்டு வருகின்றனர். இதனால் இந்த செக்மெண்டில் மிகப்பெரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் காலங்களில் ஹேட்ச்பேக் செக்மென்ட் கார்கள் பெரிய அளவில் விற்பனையாகாது. ஆனால் எஸ்யூவி கார்கள் பல அதிக எண்ணிக்கையில் விற்பனையாக வாய்ப்புள்ளது. புதிதாக கார் வாங்கும் பலர் நேரடியாக எஸ்யூவி கார்களை வாங்க விரும்பி வருகின்றனர். இதனால் வருங்காலங்களில் எஸ்யூவி ரக கார்களுக்கு மட்டுமே சிறப்பான மதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 9:12 [IST]
English summary
2023 car sales details indian auto industry luxury evs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X