தான் தயாரிக்க உள்ள கடைசி ஃப்யூவல் காரை வெளியீடு செய்த பிரபல நிறுவனம்.. இதுக்கப்புறம் கார்களையே தயாரிக்காதா?

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஸ்டெல்லண்டிஸ் ()-ம் ஒன்று. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக பல்வேறு கார் பிராண்டுகள் உள்ளன. அவற்றில் டாட்ஜ் (Dodge) -ம் ஒன்றாகும். அதிக கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வகை கார்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய நிறுவனமே தான் தயாரிக்க இருக்கும் கடைசி அதிக வேகத்தில் பயணிக்கும் கேஸ் காரை வெளியீடு செய்திருக்கின்றது. டாட்ஜ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விரைவில் கேஸோலின் (பெட்ரோல், டீசல்) கார்களின் உற்பத்தியை கைவிட இருப்பதாக அறிவித்திருந்து. இந்த அறிவிப்பையே அது செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

டாட்ஜ்

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தான் தயாரிக்க இருக்கும் கடைசி, அதிக வேகத்தில் பயணிக்கும் கேஸோலின் கார் மாடலை வெளியுலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி டெமோன் 170 (Dodge Challenger SRT Demon 170) மாடலையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த காரில் சூப்பர் ஃபாஸ்ட் பவரை வெளியேற்றக் கூடிய 6.2 லிட்டர் சூப்பர் சார்ஜட் வி8 மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் காரின் வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்பவே மிகவும் முரட்டுத் தனமான திறனை வெளியேற்றும். முழுமையாக இந்த மோட்டாரை மறு வேலைக்கு உட்படுத்தி இக்காரில் டாட்ஜ் பயன்படுத்தி இருக்கின்றது.

டாட்ஜ்

புதிய அப்டேட்டின் காரணத்தினால் இந்த மோட்டார் இ85 (E85) மற்றும் இ10 (E10) ஆகிய எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டதாக மாறி இருக்கின்றது. இ85 எரிபொருளில் இயங்கும்போது இந்த மோட்டார் அதிகபட்சமாக 1,025 பிஎச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 1,281 என்எம் டார்க்கை 4,200 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

மேலும், இந்த ஃப்யூவலை பயன்படுத்தும்போது வெறும் 1.66 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 98 கிமீ வேகத்தை இந்த கார் எட்டிவிடும். இதுமட்டுமில்லைங்க 8.91 செகண்டுகளில் உச்சபட்ச வேகமான மணிக்கு 243.2 கிமீ வேகத்தையும் இந்த கார் இ85 பெட்ரோலை பயன்படுத்தும் எட்டிவிடும்.

டாட்ஜ்

ஆனால், இ10 ரக எரிபொருளை பயன்படுத்தும்போது இதன் திறன் லேசாக குறைந்துவிடும். அதிகபட்சமாக 900 பிஎச்பி மற்றும் 1098 என்எம் ஆகியவற்றை மட்டுமே அது வெளியேற்றும். இந்த எண்கள் டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி டெமோன் 170 உலகின் அதிக வேக கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

உலகின் அதிக வேக கார்களாக கருதப்படும் புகாட்டி சிரோன் மற்றும் ரைமக் நெவேரா ஆகியவற்றின் வேகத்தையே இது அசால்ட் செய்துவிடும். இந்த கார் அதிக வேகத்தில் பயணிக்கும் சூப்பர் கார் மட்டுமில்லைங்க. அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய வாகனமாகவும் டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி டெமோன் 170 இருக்கின்றது.

டாட்ஜ்

இந்த காரின் 3,300 யூனிட்டுகளை மட்டுமே தயாரிக்க டாட்ஜ் திட்டமிட்டு இருக்கின்றது. இதில் 300 யூனிட்டுகளை கனடா நாட்டிற்கு ஒதுக்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. மீதமிருக்கும் அனைத்து யூனிட்டுகளும் அமேரிக்காவில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. ஆகையால் வேறு உலக நாடுகள் உள்ள டாட்ஜ் கார பிரியர்களால் இந்த காரை வாங்க முடியாது.

இந்த காரின் உற்பத்தி பணியை டாட்ஜ் நிறுவனம் 2023 ஜூலையில் இருந்து தயாரிக்க பிளான் போட்டு இருக்கின்றது. இதற்கு 96 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 80 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

உலகளவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல வெகு விரைவில் கேஸில் ஓடும் வாகனங்களின் உற்பத்தி நிறுத்த இருக்கின்றன. அந்தவகையில், முன்னோடி நிறுவனமாக டாட்ஜ் வெகு விரைவில் அதன் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்பை கை விட இருக்கின்றது.

ஆகையால், தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி டெமோன் 170-யே நிறுவனத்தின் கடைசி கேஸோலின் வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்கள் இணையத்தில் கசிய தொடங்கி இருக்கின்றன. அதாவது நிறுவனம் இன்னும் ஒரு சில மாதங்களில் பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை கைவிட இருப்பதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 21, 2023, 17:44 [IST]
English summary
2023 dodge challenger srt demon 170 unveiled for us and canada
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X