உங்களது 2023 ஹோண்டா சிட்டி கார் மட்டுமே தனியா வித்தியாசமா தெரியும்... இந்த ஆக்ஸஸரீகளை சேர்த்து வாங்க பாருங்க!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் பிரபலமான சிட்டி செடான் காரை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த நிலையில் புதிய சிட்டி காரை மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் பெறுவதற்கான ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரே ஹோண்டா கார் என்று பார்த்தால், அது சிட்டி செடான் மாடல் தான். இதனாலேயே குறிப்பிட்ட கால இடைவெளியில் சிட்டி காரை ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்து விடுகிறது. இந்த வகையில் இந்த புதிய 2023ஆம் ஆண்டிற்காக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிட்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023 ஹோண்டா சிட்டி காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

இந்த நிலையில் தற்போது, காரை வாங்கும்போது கூடுதலாக வழங்கப்பட உள்ள காருக்கான ஆக்ஸஸரீகளை ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றை பெறுவதற்கு நீங்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆக்ஸஸரீகளை நிராகரித்தும் உங்களால் 2023 ஹோண்டா சிட்டி காரை வாங்க முடியும். க்ரோம் பேக்கேஜ், பேசிக் பேக்கேஜ் மற்றும் யுடிலிட்டி பேக்கேஜ் என்ற 3 விதமான பேக்கேஜ்களில் 2023 சிட்டி காருக்கான இந்த ஆக்ஸஸரீகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதில் க்ரோம் பேக்கேஜ் ஆனது அட்மைர் & எலகென்ஸ் என 2 பிரிவுகளாக உள்ளது. அட்மைர் பிரிவில் காரின் முன்பக்க பம்பருக்கு சைடு கார்னிஷ், ட்ரங்க் கார்னிஷ், டெயில்லேம்ப் கார்னிஷ் மற்றும் கதவுகளுக்கு அடிப்பகுதியில் கார்னிஷை பெறலாம். அதுவே எலகென்ஸ் பிரிவில் ஜன்னல் கண்ணாடி பகுதியில் க்ரோம் மோல்டிங், முன்பக்க ஃபெண்டர் கார்னிஷ், முன்பக்க க்ரில் கார்னிஷ் மற்றும் க்ரோம் டோர் விஸர் உள்ளிட்டவற்றை காரில் பெற முடியும். இவையே க்ரோம் பேக்கேஜ் ஆகும்.

2023 ஹோண்டா சிட்டி காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

பேசிக் பேக்கேஜில் இவ்வாறான பிரிவுகள் எதுவும் கிடையாது. பெயருக்கேற்ப இந்த பேக்கேஜில் பக்கெட் மேட், ஃப்ளோர் மேட், குஷின், கீ செயின், அவசரகால சுத்தியல் மற்றும் மைக்ரோ ஃபைபர் துணி என மிகவும் அடிப்படையான ஆக்ஸஸரீகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. யுடிலிட்டி பேக்கேஜில் முன் & பின் பம்பருக்கு பாதுகாப்பான், கதவு ஹேண்டில் பாதுகாப்பான், டோர் எட்ஜ் கார்னிஷ் மற்றும் காரின் பக்கவாட்டில் மோல்டிங் என பேசிக் பேக்கேஜை காட்டிலும் சற்று பிரீமியம் தரத்திலான அம்சங்கள் உள்ளன.

இந்த ஆக்ஸஸரீ பேக்கேஜ்களுக்கான விலைகள் குறித்த விபரங்களை அறிய அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப் மையத்தையோ அல்லது ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தையோ அணுகவும். மேற்கூறப்பட்ட ஆக்ஸஸரீகள் இல்லாமல், 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் நிலையான அம்சங்களாகவே மேற்கூரையில் விஸர், மட்கார்ட்ஸ், எல்இடி விளக்கு உடன் ட்ரங்க் ஸ்பாய்லர் மற்றும் பின்பக்க பூட் பகுதியில் ட்ரங்க் டிரே உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2023 ஹோண்டா சிட்டி காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

உட்பக்க கேபினை பொறுத்தவரையில், இருக்கை கவர்களை எவரொவரும் 5 விதமான நிறங்களுள் ஒன்றில் தேர்வு செய்ய முடியும். அத்துடன், பயணிகள் கால் வைக்கும் பகுதியில் விளக்குகள், படிக்கட்டில் ஒளிரும் லோகோ விளக்குகள், ஸ்டேரிங் சக்கர கவர், ஒளி ஊடுருவக்கூடிய தரைப்பாய்கள் மற்றும் வயர் இல்லா சார்ஜர் போன்றவற்றையும் தேவையென்றால் கூடுதல் தொகையை செலுத்தி வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம்.

2023 ஹோண்டா சிட்டி காரில் மிக முக்கிய அம்சமாக ADAS தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்கால மாடர்ன் கார்களில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவரும் இது ஓட்டுனருக்கு தேவையான பல்வேறு அட்வான்ஸ்டு வசதிகளை வழங்கக்கூடியது. மற்றப்படி என்ஜினில் மாற்றமில்லை. முந்தைய சிட்டி காரில் வழங்கப்பட்டு வந்த அதே 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் பொருத்தப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 16, 2023, 10:48 [IST]
English summary
2023 honda city facelift accessories revealed
மேலும்... #ஹோண்டா #honda #honda city
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X