புதிய அவதாரம் எடுக்கிறது ஹோண்டா சிட்டி! விலை இவ்ளோதானா! மைலேஜில் மாருதி கார்களையே தூக்கி சாப்பிட போகுது!

இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான கார்களில் ஒன்றாக ஹோண்டா சிட்டி அறியப்படுகிறது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) போன்ற கார்களுடன் ஹோண்டா சிட்டி போட்டியிட்டு வருகிறது. இதில், ஹூண்டாய் வெர்னா காரின் புதிய தலைமுறை (New-generation) மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.

புதிய அவதாரம் எடுக்கிறது ஹோண்டா சிட்டி! விலை இவ்ளோதானா! மைலேஜில் மாருதி கார்களையே தூக்கி சாப்பிட போகுது!

அனல் பறக்கும் போட்டி!

அதே நேரத்தில் புது வரவுகளான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மறுபக்கம் மாருதி சுஸுகி நிறுவனமோ பல்வேறு புதிய வசதிகளுடன் 2023 சியாஸ் காரை சமீபத்தில் விற்பனைக்கே கொண்டு வந்து விட்டது. எனவே ஹோண்டா சிட்டி காருக்கு சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது.

மோதி பாத்தரலாம்!

இதன் காரணமாக சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் தயாராகி விட்டது. இந்த புதிய மாடலானது, ஆர்டிஇ விதிமுறைகளுக்கு (RDE Norms) இணக்கமான இன்ஜின்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் மார்ச் 2ம் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள ஷோரூம்களுக்கு வர தொடங்கும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அவதாரம் எடுக்கிறது ஹோண்டா சிட்டி! விலை இவ்ளோதானா! மைலேஜில் மாருதி கார்களையே தூக்கி சாப்பிட போகுது!

எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறுது!

அதற்கு மறுநாள், அதாவது வரும் மார்ச் 3ம் தேதியில் இருந்து, ஹோண்டா சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை (Price) எவ்வளவு? என்பதையும் ஹோண்டா நிறுவனம் அறிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளன.

சிட்டி 'ஸ்மார்ட் சிட்டி' ஆக போகுது!

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன்படி ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் பல்வேறு புதிய அதிநவீன வசதிகளையும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெறவுள்ளது. இதுதவிர வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான தகவலும் இங்கே உள்ளது.

புதிய அவதாரம் எடுக்கிறது ஹோண்டா சிட்டி! விலை இவ்ளோதானா! மைலேஜில் மாருதி கார்களையே தூக்கி சாப்பிட போகுது!

இதுக்காகதான் இத்தன நாளா தவம் கிடந்தோம்!

ஹோண்டா சிட்டி கார் தற்போது ஹைப்ரிட் (Hybrid) மாடலிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை குறைவான புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்களையும் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே குறைவான விலையில் சிட்டி ஹைப்ரிட் காரை வாங்க முடியுமா? என காத்து கிடப்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜின் ஆப்ஷன்கள்!

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், தற்போது வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆர்டிஇ விதிமுறைகளுக்கு இணக்கமான வகையில் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். மறுபக்கம் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலிலும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின்தான் வழங்கப்படவுள்ளது. இதனுடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் வழங்கப்படலாம்.

விலை எவ்ளோங்க இருக்கும்?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வழக்கமான ஹோண்டா சிட்டி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.87 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.62 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் புதிய அப்டேட்கள் செய்யப்படுவதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதைக்காட்டிலும் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை அதிகமாக இருக்கலாம்.

இது மட்டும் நடந்துட்டா போதும்!

மறுபக்கம் ஹோண்டா சிட்டி காரின் ஹைப்ரிட் மாடல் தற்போது ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைத்து வருகிறது. தற்போதைய நிலையில் இதன் விலை 19.89 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த ஹைப்ரிட் மாடலில், புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் விலை 15 அல்லது 16 லட்ச ரூபாயில் இருந்தே தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் தற்போதைய அதிகாரப்பூர்வமான மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 26.50 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் எள் அளவிற்கும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 15, 2023, 16:39 [IST]
English summary
2023 honda city facelift all details you need to know
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+