புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை இவ்ளோதானா! மைலேஜ் அதை விட ஆச்சரியமா இருக்கே! உடனே வாங்கணும் போல தோணுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள சிட்டி செடான் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹோண்டா (2023 Honda City Facelift) நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அடாஸ் தொழில்நுட்ப வசதி (ADAS - Advanced Driver Assistance Systems) வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹோண்டா சிட்டி காரின் புதிய மாடல், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடாஸ் தொழில்நுட்பம், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை இவ்ளோதானா! மைலேஜ் அதை விட ஆச்சரியமா இருக்கே! உடனே வாங்கணும் போல தோணுது!

பழைய ஹோண்டா சிட்டி காரில் இருந்த அதே 1.5 லிட்டர் i-VTEC இன்ஜின்தான், புதிய ஹோண்டா சிட்டி காரிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6,600 ஆர்பிஎம்மில் 119 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 145 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 17.8 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், சிவிடி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 18.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹோண்டா தெரிவித்துள்ளது. 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவை மிகவும் முக்கியமானவை.

புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை இவ்ளோதானா! மைலேஜ் அதை விட ஆச்சரியமா இருக்கே! உடனே வாங்கணும் போல தோணுது!

இவை தவிர மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளையும் 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது. டிசைனை பொறுத்தவரை 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பகுதியில் ஸ்போர்ட்டியான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர முன் பக்க பம்பரும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய பனி விளக்குகள் அறை, புதிய பின் பக்க பம்பர் ஆகியவற்றையும் 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது. அத்துடன் புதிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களும், 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஹோண்டா சிட்டி காரின் டிசைன் முன்பை காட்டிலும் தற்போது நன்றாக மெருகேறியுள்ளது என்று சொல்லலாம்.

2023 ஹோண்டா சிட்டி காரில், புதிய வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அது SV வேரியண்ட் ஆகும். இதுதவிர V, VX மற்றும் ZX வேரியண்ட்களிலும் 2023 ஹோண்டா சிட்டி கார் கிடைக்கும். பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை (Price) வெறும் 11.49 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் களமிறக்கப்பட்டுள்ளதால், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) ஆகிய கார்களுக்கு, 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 4, 2023, 17:42 [IST]
English summary
2023 honda city facelift all you need to know
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+