2023 ஹோண்டா சிட்டி கார் பார்க்க எப்படி இருக்கு? காரின் ஃபோட்டோ கேலரி!!
இந்திய சந்தையில் சமீபத்தில் 2023 சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை ஹோண்டா அறிமுகம் செய்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். 2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த போது எடுக்கப்பட்ட படங்கள்...
இந்தியாவில் பிரபலமான செடான் கார்களுள் ஒன்று சிட்டி ஆகும். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவிற்கு நம் நாட்டு சந்தையில் நீண்ட வருடங்களாக விற்பனையில் நம்பிக்கைக்குரிய மாடலாக சிட்டி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் சிட்டி அளவிற்கு வேறெந்த ஹோண்டா காரும் கடந்த பல வருடங்களாகவே பிரபலமாகவில்லை. இதன் காரணமாக மற்ற எந்த காரை ஹோண்டா அப்டேட் செய்கிறதோ இல்லையோ சிட்டி செடான் காரை அப்டேட் செய்துவிடும்.

இதன்படி சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் 5ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்றாலே காரின் முன்பக்கமும், பின்பக்கமும் தான் அதிகளவில் மாற்றம் செய்யப்படும். அதேபோல் உட்பக்க கேபினிலும் சில பல அப்கிரேட்கள் வழங்கப்படலாம். புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரும் புத்துணர்ச்சியான முன்பக்கத்தை பெற்று வந்துள்ளது. ஆனால் அதனை காட்டிலும் புதிய சிட்டியில் நாம் கவனிக்கக்கூடிய அம்சமாக அடாஸ் வழங்கப்பட்டுள்ளது.
ADAS, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் என்பதன் சுருக்கமான அடாஸ் மூலமாக வாகனம் மற்றும் பயணிகள் இருவருக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். தற்கால மாடர்ன் கார்கள் அடாஸ் வசதிகளை பெற்று வருவது ஒரு டிரெண்ட்டாக மாறி வருகிறது. இருப்பினும் காரின் என்ஜினை ஹோண்டா மாற்றவில்லை. பழைய சிட்டியில் வழங்கப்பட்ட அதே 1.5 லிட்டர் ஐ-விடெக் என்ஜின் தான் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 6,600 ஆர்பிஎம்-இல் 119 பிஎச்பி மற்றும் 4,300 ஆர்பிஎம்-இல் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில் மேனுவல் தேர்வில் 17.8kmpl மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் உடன் 18.4kmpl மைலேஜையும் பெறலாம் என்கிறது ஹோண்டா. அடாஸ் வசதி உடன் 2023 சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் வேறு சில முக்கிய தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
வயர்லெஸ் போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, மழை வந்தால் தன்னிச்சையாக இயங்கும் வைபர்கள் மற்றும் ஆம்பியண்ட் லைட் செட்-அப் உள்ளிட்டவை அந்த தொழிற்நுட்ப வசதிகளில் குறிப்பிடத்தக்கவை. காரின் தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என்று பார்த்தால், முகப்பு பக்கத்தில் ஸ்போர்டியான டிசைனில் க்ரில் வழங்கப்பட்டுள்ளது, முன்பக்க பம்பரின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் ஃபாக் விளக்குகளுக்கு புதுமையான வடிவில் குழிகள், பின்பக்கத்தில் புதிய பம்பர் உள்ளிட்டவை 2023 ஹோண்டா சிட்டியின் தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் ஆகும். இவற்றுடன், முன்பு இருந்ததற்கு மாற்றாக 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்களை புதிய சிட்டி காரில் ஹோண்டா வழங்கியுள்ளது. இந்த அப்கிரேட்களுடன் 2023 சிட்டி ஃபேஸ்லிஃப்ட் செடான் காரில் எஸ்வி என்ற பெயரில் புதிய வேரியண்ட்டையும் ஹோண்டா கார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
புதிய எஸ்வி வேரியண்ட் மட்டுமின்றி முந்தைய வி, வி.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் வேரியண்ட்களிலும் 2023 ஹோண்டா சிட்டி விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.11.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடாஸ் வசதி ஆனது ஆரம்பத்தில் சிட்டி ஹைப்ரீட் காரில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2023 சிட்டி ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகத்தின் வாயிலாக அடாஸ் வசதிகள் சிட்டியின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சென்றுள்ளன.

விற்பனையில் இந்த ஹோண்டா செடான் காருக்கு மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. இருப்பினும் இந்த பிரிவில் ஹோண்டா சிட்டியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதற்கு கூடுதல் பலம் சேர்ப்பதுபோல் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் வேறு நமது நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் முழுமையான ஃபோட்டோ கேலரியை காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications









