ஊர்ல இருக்குற பெரிய ஆள் எல்லாம் இந்த காரை வாங்கி போட போறாங்க! வேற லெவல்ல அறிமுகமான ஹோண்டா சிட்டி கார்!
இந்தியாவில் நீண்ட நாட்களாக விற்பனையாகி வரும் கார் ஹோண்டாவின் சிட்டி கார் தான். செடான் கார்களின் விற்பனை குறைந்தாலும் ஹோண்டா சிட்டி காருக்கு மார்கெட்டில் ஒரு மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது 6வது தலைமுறை ஹோண்டா சிட்டி காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
2020ம் ஆண்டு ஹோண்டா சிட்டி கார் பெரிய மாற்றங்களுடன் களம் இறக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் கழித்து அடுத்த அப்டேட் உடன் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த கார் எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் கார்கள் அறிமுகமாகியுள்ளது.

2023 ஹோண்டா சிட்டி புதிய காரில் பல புதிய காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக காரின் முகப்பு பகுதியிலிருந்த பெரிய க்ரோம் பார் புதிய அப்டேட்டில் சிறியதாகப்பட்டுள்ளது. ஹனிகோம்ப் பேட்டனில் கிரில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் பம்பரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது.
எல்இடி ஹெட்லைட் யூனிட் பார்க்க கடந்தாண்டு வெளியான ஹைபிரிட் வேரியன்ட் காரில் உள்ளது போலவே இருக்கிறது. பக்கவாட்டு பகுதியில் தற்போது விற்பனையாகும் அதே டிசைனே இந்த காரிலும் இரக்கிறது. ஆனால் கவனிக்கத்தக்க மாற்றம் என்றால் 16 இன்ச் அலாய் வீல் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 15 இன்ச் அலாய் வீல் அப்ஷனும் உள்ளது.
வெளிப்புறத்தில் பின்பக்க பம்பரும் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. இது போக ஹோண்டா நிறுவனம் இந்த சிட்டி காரில் புதிதாக நீல நிற டிசைனை வழங்கியுள்ளது. ஓப்சீடன் ப்ளூ பியர்ல் என்ற புதிய கலரை இந்த அப்டேட் உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிப்புறத்தில் இந்த மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
புதிய ஹோண்டா சிட்டி 2023 காரில் உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. புதிதாக டூயல் டோன் தீம் மற்றும் புதிய அப்ஹோல்சரிகள் இந்த காரில் உள்ளது. மேலும் இந்த காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூப் ஆகிய அம்சங்கள் உள்ளன.
மேலும் இந்த ஹோண்டா சிட்டி 2023 காரில் வயர்லெஸ் போன் சார்ஜர்கள், வயர்லெஸில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்களும் இந்த காரில் உள்ளன. முக்கியமாக அடாஸ் தொழிற்நுட்பம் இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் ஹோண்டா சென்ஸிங் தொழிற்நுட்பத்தில் இயங்கும்.
இந்த தொழிற்நுட்பம் கடந்தாண்டு அறிமுகமான ஹோண்டா சிட்டி ஸ்டிராங்க் ஹைபிரிட் செடான் கார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தின் மூலம் காருக்கு அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், அட்டோனமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி காரின் இன்ஜினை பொருத்தவரை இந்நிறுவனம் தனது 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை கைவிட்டு விட்டது மாறாக இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இ20 எத்தனால் கலந்தபெட்ரோலிலும் இயங்கும் திறனும் வடிவமைக்கப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பிஎச்பி பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் மேனுவல் வேரியன்ட் 17.8 கி.மீ மைலேஜையும், ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 18.4 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. இதுபோக ஹைபிரிட் வெர்ஷன் காரும் இருக்கிறது.
ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 126 எச் பி பவரையும் 256 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 27.13 கி.மீ மைலேஜை வழங்குகிறது.
ஹோண்டா சிட்டி 2023 காரின் விலையைப் பொருத்தவரை பெட்ரோல் வேரியன்ட் ரூ11.49 லட்சம் முதல் ரூ15.97 லட்சம் என்ற விலையிலும் ஹைபிரிட் கார் ரூ18.89 லட்சம் மற்றும் ரூ20.39 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. பெட்ரோலில் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் விலை ரூ13.62 லட்சம் என்ற விலையில் ஆரம்பமாகிறது.
| Honda City Price Ex-showroom | |||
| Variant | MT | AT | e:HEV |
| SV | ₹11.49 Lakh | ||
| V | ₹12.37 Lakh | ₹13.62 Lakh | ₹18.89 Lakh |
| VX | ₹13.49 Lakh | ₹14.74 Lakh | |
| ZX | ₹14.72 Lakh | ₹15.97 Lakh | ₹20.39 Lakh |
இந்த ஹோண்டா சிட்டி 2023 கார் மார்கெட்டில் மாருதி சுஸூகி சியாஸ், மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் வெர்னா 2023 ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே செக்மெண்டில் மார்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களும் இருக்கின்றன. இந்த புதிய ஹோண்டா சிட்டி 2023 கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








