சேஃப்டி முக்கியம் பாஸ்! குறைந்த விலை அடாஸ் கார் எது தெரியுமா? இந்த கார்ல இப்படி ஒரு அம்சம் இருக்குதா?
ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி செடான் காரை அப்டேட் செய்து கடந்த 2ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த காரில் வெளிப்புறத்தோற்றம் மற்றும் உட்புற கட்டமைப்பு, புதிய அம்சங்கள் என மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் மிட்சைஸ் செடான் காராகும். தற்போது இந்தியாவில் செடான் கார்களின் விற்பனையே கணிசமாகக் குறைந்துள்ளது.
இருந்தாலும் மக்களுக்கு இந்த ஹோண்டா சிட்டி கார் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனாலேயே தொடர்ந்து இந்த கார் விற்பனையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த செக்மெண்டிலேயே அடாஸ் தொழிற்நுட்பத்துடன் உள்ள காராக இந்த 2023 ஹோண்டா சிட்டி கார் அறிமுகமாகியுள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்த அடாஸ் தொழிற்நுட்பத்தை இந்த பெட்ரோல் பவர்டு சிட்டி காரில் இந்த அப்டேட்டில் தான் வழங்கியுள்ளது. முன்னதாக ஹைபிரிட் தொழிற்நுட்பம் கொண்ட சிட்டி காரில் இந்த அடாஸ் தொழிற்நுட்பத்தை வழங்கியது. தற்போது கம்பஷன் இன்ஜினில் சிட்டி காரில் வி வேரியன்ட் கார் தான் இந்தியாவின் குறைந்த விலை அடாஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது
ஹோண்டா சிட்டி காரில் வி வேரியன்ட் இரண்டாவது பேஸ் மாடல் காராகும். ஹோண்டா சிட்டி காருக்கு முன்னர் குறைந்த விலை அடாஸ் காராக எம்ஜி அஸ்டர் காரின் சாவே வேரியன்ட் கார் இருந்தது. தற்போது அஸ்டர் சாவே வேரியன்ட் கார் இந்தியாவில் ரூ16.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
தற்போது ஹோண்டா சிட்டி வி வேரியன்ட் கார் ரூ12.37 லட்சம் என்ற விலையில் மேனுவல் கியர் உடனும், ரூ13.62 லட்சம் என்ற விலையில் சிவிடி கியர் பாக்ஸ் உடனும் விற்பனையாகிறது. எம்ஜி அஸ்டர் காரை விட ரூ4.42 லட்சம் குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் குறைந்த விலை அடாஸ் காராக ஹோண்டா சிட்டி கார் விற்பனையாகி வருகிறது. ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை வரும் மார்ச் 21ம் தேதி ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா காரின் அப்டேட் வெர்ஷனை வெளியிடுகிறது. இதுவும் செடான் ரக கார் தான். இந்த காரிலும் அடாஸ் தொழிற்நுட்பம் வர வாய்ப்புள்ளது. அதன் விலை இதை விடக் குறைவாக இருந்தால் அந்த கார் இந்தியாவின் குறைந்த விலை காராக மாறிவிடும்.
ஹோண்டா சிட்டி வி வேரியன்ட் காரில் அடாஸ் தொழிற்நுட்பம் மட்டுமல்ல கீலெஸ் எண்ட்ரி, ரெக்வோஸ்ட் சென்சா், புஷ்-பட்டன், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், ஸ்டிரிங் மவுண்ட் கண்ட்ரோல், கேமராவை அடிப்படையாகக் கொண்ட அடாஸ் சென்சிங் சூட், ஆட்டோமெட்டிக் கியருக்கான பெடல் ஸிஃப்டர்கள், ஆகிய இந்த காரில் இருக்கிறது.
இந்த காரின் விலையைப் பொருத்தவரை எஸ்வி வேரியன்ட் ரூ11.49 லட்சம் என்ற விலையிலும், வி வேரியன்ட் ரூ12.37 லட்சம் என்ற விலையிலும், விஎக்ஸ் வேரியன்ட் ரூ13.49 லட்சம் என்ற விலையிலும், இசட் எக்ஸ் வேரியன்ட் ரூ14.72 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஆர்டிஇ கட்டுப்பாடுகளுக்கு இணங்க 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பழைய மாடலில் உள்ள அதே இன்ஜின் தான் இது ஆர்டிஇ கட்டுப்பாட்டு அம்சங்கள் மட்டும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 118 பிஎச்பி பவரையும், 145 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதே ஹோண்டா சிட்டி காரில் ஸ்டிராங்க் ஹைபிரிட் வெர்ஷன் இருக்கிறது. இ:எச்இவி மாடல் கார் அதிகபட்சமாக லிட்டருக்கு 26 கி.மீ வரை மைலேஜ் தரும். இந்த கார் ரூ18.89 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications








