புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ஹூண்டாய் அல்கஸார் - விலைகள் அறிவிச்சாச்சு!!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2023 அல்கஸார் (2023 Alcazar) காருக்கான முன்பதிவுகளை இந்த மார்ச் மாத துவக்கத்தில் துவங்கியது. அதனை தொடர்ந்து தற்போது, புதிய டர்போ என்ஜின் உடன் புதிய அல்கஸாரின் விலைகளை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.
பிரபலமான க்ரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் உருவாக்கிய 6/ 7-இருக்கை எஸ்யூவி கார் தான் அல்கஸார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட 2023 மாடல் முந்தைய 2.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினிற்கு பதிலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை புதியதாக பெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.25,000 டோக்கன் தொகை உடன் துவங்கப்பட்டு, நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் எக்ஸ்-ஷோரூம் விலைகளுடன் 2023 ஹூண்டாய் அல்கஸார் காரின் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஸ்டீஜ், பிளாட்டினம், பிளாட்டினம் (ஆப்ஷ்னல்) மற்றும் சிக்னெச்சர் (ஆப்ஷ்னல்) என்ற 4 விதமான வேரியண்ட்களில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிளாட்டினம் (ஆப்ஷ்னல்) மற்றும் சிக்னெச்சர் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களை 6 அல்லது 7 இருக்கைகளுடன் வாங்கலாம். ஆனால் பிரெஸ்டீஜ், பிளாட்டினம் வேரியண்ட்களை 7 இருக்கைகளுடன் மட்டுமே வாங்க முடியும்.
அதேபோல் பிரெஸ்டீஜ், பிளாட்டினம் வேரியண்ட்களில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் அல்கஸார் காரை வாங்க முடியும். பிளாட்டினம் (ஆப்ஷ்னல்) மற்றும் சிக்னெச்சர் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களை 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும். இந்த வேரியண்ட்களுக்கு புதியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்னென்ன? இவை பழைய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடனான அல்கஸாரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை காட்டிலும் எவ்வளவு அதிகம் என்பதை கீழுள்ள அட்டவணையில் காணலாம்.
| Hyundai Alcazar | 1.5 Turbo | Old 2.0 - Discontinued |
| Prestige 6MT 7S | ₹16.75 Lakh | ₹16.10 Lakh |
| Platinum 6MT 7S | ₹18.65 Lakh | ₹18.60 Lakh |
| Platinum (O) 7DCT 6S / 7S | ₹19.96 Lakh | ₹19.86 Lakh |
| Signature (O) 7DCT 6S/ 7S | ₹20.25 Lakh | ₹20.15 Lakh |

இதில் குறிப்பிட்டு நாம் சொல்ல வேண்டுமென்றால், ஆரம்ப நிலை பிரெஸ்டீஜ் வேரியண்ட்டின் விலை ஆனது முந்தைய பெட்ரோல் என்ஜின் உடன் அல்கஸாரின் விலையை காட்டிலும் சுமார் ரூ.65,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவைகளின் விலைகள் ரூ.5,000- ரூ.10,000 அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 158 எச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
முந்தைய 2.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 159 எச்பி மற்றும் 191 என்எம் டார்க் திறன் வரையில் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியதாக இருந்தது. புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாஸ் தேர்வுகள் கிடைக்கும். இதில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 17.5kmpl மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் 18kmpl மைலேஜையும் பெற முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீசல் என்ஜின் உடனும் ஹூண்டாய் அல்கஸார் கார் கிடைக்கிறது. டீசல் வேரியண்ட்களில் பொருத்தப்படும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 4,000 ஆர்பிஎம்-இல் 116 எச்பி மற்றும் 1,500- 2,750 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டீசல் என்ஜின் உடன் கியர்பாக்ஸ் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கொடுக்கப்படுகின்றன.
ஹூண்டாய் அல்கஸாரில் வழங்கப்படும் இந்த இரு என்ஜின்களும் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் புதிய 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளின்படி, ரியல் டிரைவ் எமிஷனுக்கு இணக்கமானவை மற்றும் எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடியவை. புதிய டர்போ என்ஜின் உடன் 2023 அல்கஸாரின் முன்பக்க க்ரில் டிசைன் சற்று மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், 'ALCAZAR' வார்த்தையில் பெடில் லேம்ப் லோகோ, பின்பக்கத்தில் புதிய 'டர்போ' பேட்ஜ்கள் மற்றும் கேபினுக்குள் ஐடியல் என்ஜின் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் அல்கஸாரில் புதியவைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








