இந்த விலை குறைவான ஹூண்டாய் காரை வாங்க கூட்டம் குவிய போகுது!! அசத்தலான அப்கிரேட்கள்... புக்கிங் ஸ்டார்ட்

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய ஹூண்டாய் கார்களுள் ஒன்றான கிராண்ட் ஐ10 நியோஸ் புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களுடன் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பற்றிய விபரங்களை படங்களுடன் வெளியீடு செய்திருப்பதுடன் இந்த காருக்கான முன்பதிவுகளையும் இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் 2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை ரூ.11,000 என்ற டோக்கன் தொகையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கிராண்ட் ஐ10 நியோஸின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் மிக விரைவில் துவங்க இருக்கின்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் நிறுத்தப்பட உள்ளது.

இந்த விலை குறைவான ஹூண்டாய் காரை வாங்க கூட்டம் குவிய போகுது!!

புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் தோற்றத்தில் மெருக்கேற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி, புதியதாக சில வசதிகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் முன்பை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு மிகுந்ததாக கிராண்ட் ஐ10 நியோஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முகப்பு பகுதியில் பெரிய அளவிலான க்ரில் அமைப்பை பெற்றுள்ளது. அத்துடன் முன்பக்க பம்பரின் டிசைனும் புதியதாக உள்ளது.

காரின் முன்பக்கத்தில் பம்பருக்கு இரு முனைகளிலும் புதிய முக்கோண அம்பு வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உண்மையில் காருக்கு மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன. 2023 கிராண்ட் ஐ10 நியோஸ் கார் புதிய 15-இன்ச் அலாய் சக்கரங்களின் மூலம் இயங்கக்கூடியதாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் இந்த கார் புதிய எல்இடி டெயில்லைட்களை கொண்டுள்ளது. டெயில்லைட்கள் இரண்டையும் லைட் பார் ஒன்று இணைக்கிறது.

இந்த விலை குறைவான ஹூண்டாய் காரை வாங்க கூட்டம் குவிய போகுது!!

2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் டைட்டன் கிரே, டைபூண் சில்வர், டியல் ப்ளூ, ஃபியரி சிவப்பு, ஸ்பார்க் க்ரீன் மற்றும் போலார் வெள்ளை என்ற 6 விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கும். இதில் கடைசி இரு நிறத்தேர்வுகள் கருப்பு நிற மேற்கூரை உடன் ட்யூவல்-டோன் ஆகவும் கிடைக்கும். 2023 கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் உட்பக்கத்திற்கு சென்றோமேயானால், இருக்கைகள் கிரே நிறத்திலான துணியால் மூடப்பட்டுள்ளன.

ஸ்டேரிங் சக்கரம் லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணி கால் வைக்கும் பகுதியில் சில பளிச்சிடும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் யுஎஸ்பி சி சார்ஜிங் துளைகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. டேஸ்போர்டில் இந்த கார் 8 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரையினை கொண்டுள்ளது. இந்த திரை ஆனது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக உள்ளது.

இந்த விலை குறைவான ஹூண்டாய் காரை வாங்க கூட்டம் குவிய போகுது!!

இவற்றுடன் கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதிகளையும் பெற முடியும். 2023 கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களாக 4 ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக வழங்கப்பட்டுள்ளன. அதுவே டாப் வேரியண்ட்களில் இவற்றை 6 ஆக பெற முடியும். இபிடி உடன் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஸர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் டே-நைட் ரியர் வியூ மிரர் உள்ளிட்டவை இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்களாகும்.

மற்றப்படி என்ஜின் உள்பட இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் 2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸிலும் வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினே தொடரப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த பெட்ரோல் என்ஜினை சிஎன்ஜி வெர்சனிலும் வாங்க முடியும். பெட்ரோல் வேரியண்ட்களை மேனுவல் (அ) ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெற முடியும் என்கிற சூழல் உள்ள நிலையில், சிஎன்ஜி வேரியண்ட்களை வெறும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 10, 2023, 11:19 [IST]
English summary
2023 hyundai grand i10 nios facelift car unveiled bookings open
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+