சென்னையில சார்ஜ் போட்டா நிக்காம கோயமுத்தூர் வர போலாம்! ஹூண்டாய் காரில் வரப்போகும் செம அப்டேட்!
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா கார் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த காரை அந்நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு இறுதி அல்லது 2024ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சர்வதேச அளவில் பெட்ரேல், ஹைபிரிட், மற்றும் எலெக்டரிக் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி 2 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் உள்ள பேட்டரி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பவர் டெரைன்
கோனா இவி கார் மொத்தம் 2 விதமான பவர் மோட்டார் ஆப்ஷனில் உள்ளது ஒன்று ஸ்டாண்டர்டு ரேஞ்ச், மற்றொன்று நீண்ட தூர ரேஞ்ச் இதில் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் காரை பொருத்தவரை 155 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மோட்டார் கொண்டது. இதில் 48.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
அதிக பவர் கொண்ட வெர்ஷனாக நீண்ட தூர ரேஞ்ச் வெர்ஷன் இருக்கிறது. இது 218 பிஎஸ் பவரையும் 255 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதற்கு 65.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி மூலம் பவர் கிடைக்கும். இந்தியாவில் இந்த காரில் 39.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் ஸ்டாண்டர்டு வேரியன்ட் குறித்த ரேஞ்ச் தகவல்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிடவில்லை ஆனால் நீண்ட தூர ரேஞ்ச் கொண்ட காரின் ரேஞ்ச் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 490 கி.மீ வரை பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காரை சார்ஜ் செய்ய ஒரு ஃபாஸ்ட் சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது. அந்த சார்ஜ் இந்த காரின் பேட்டரியை 10 சதவீதத்திலிருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 41 நிமிடத்தில் ஏற்றிவிடும் என அறிவித்துள்ளது.
இந்த காரில் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம் இருக்கிறது. இது ஒன் பெடல் டிரைவிங் சிஸ்டத்திற்கு உதவியாக இருக்கும். இந்த கார் வெகிஹில் டூ லோடு அம்சம் கொண்டது. அதாவது இந்த காரை நீங்கள் பவர் பேங்காக மாற்றி மற்ற எலெக்ட்ரானிக் பொருட்களை இயங்க வைக்கலாம் உதாரணமாக எலெக்ட்ரிக் அடுப்பை இந்த பேட்டரியில் இயங்க வைக்கலாம்.
டிசைன்
இந்த காரின் டிசைன் பொருத்தவரை ஐயானிக் 5 மற்றும் 6 ஆகியவற்றின் டிசைனில் இன்ஸ்பயர் ஆகி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த காரின் அம்சம் மாறாமல் இருக்கிறது. இதன் முன்பக்கம் பெரிய எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது. இது ஐயானிக் 5 டிசன் இன்ஸ்பிரேஷனாகும்.
பின்பக்கமும் முன்பக்கம் போல எல்இடி ஸ்டிரிப் பிக்ஸல் கிராஃபிக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. டெயில் லைட் பம்பரின் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
அம்சங்கள்
இந்த ஹூண்டாய் கோனா காரை பொருத்தவரை ஐயானிக் 5 காரில் உள்ள அம்சங்கள் எல்லாம் இதிலும் இருக்கிறது. 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கு தனியாக 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல் ஸ்கிரீன், கீலெஸ் என்ட்ரி, 8 ஸ்பீக்கர் போஸ் பிரிமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வூஃபர்,
பவர்டு டெயில் கேட், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, அடாஸ் தொழிற்நுட்பத்தில் இயங்கும் லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட், கோலிஷன் அவாய்டென்ஸ் அசிஸ்ட், இன்டெலிஜென்ட் ஸ்பீடு லிமிட் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ஹைபீம் அசிஸ்ட், ஃபார்வேர்டு கோலிஷன் அவாய்டென்ஸ் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
இந்தியாவில் கோனா காரில் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டுமே விற்பனையாகிறது. தற்போது உள்ள இந்த புதிய தலைமுறை கோனா சர்வதேசச் சந்தைக்கானது தான். இந்தியாவில் இந்த கார் எப்பொழுது அப்டேட் ஆகும் என்ற தகவல் வெளியாகவில்லை. தற்போது இந்தியாவில் கோனா எலெக்ட்ரிக் கார் ரூ23.84 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இது நேரடியாக மார்கெட்டில் எம்ஜி இசட்எஸ் இவி காருடன் போட்டியிருக்கிறது. இது போக டாடா நெக்ஸான் இவி மற்றும் எக்ஸ்யூவி 400 ஆகிய கார்களும் இதற்குப் போட்டி தான்.


Click it and Unblock the Notifications