போட்டி நிறுவனங்களுக்கு தண்ணி காட்ட போகும் ஹூண்டாய் கார்! ரேட் கம்மி! அதான் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2023 ஹூண்டாய் வெர்னா (2023 Hyundai Verna) இன்று (மார்ச் 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போது புதிய தலைமுறை (New-Gen) மாடலாக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் வெர்னா செடான் மிகவும் பிரபலமான ஒரு காராகதான் இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது பல்வேறு புதிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ள காரணத்தால், போட்டி மாடல்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை இது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நிறுவனங்களுக்கு தண்ணி காட்ட போகும் ஹூண்டாய் கார்! ரேட் கம்மி! அதான் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஹோண்டா சிட்டி (Honda City), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகியவைதான், ஹூண்டாய் வெர்னா காரின் முக்கியமான போட்டி மாடல்கள் ஆகும். 2023 ஹூண்டாய் வெர்னா காருக்கு குவிந்துள்ள முன்பதிவுகளின் (Bookings) எண்ணிக்கை, இந்த போட்டி மாடல்களை கதிகலங்கி போக செய்யும் வகையில் உள்ளது.

25 ஆயிரம் ரூபாய் என்ற முன் தொகையுடன், 2023 ஹூண்டாய் வெர்னா காருக்கு தற்போது முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், இந்த புதிய மாடலுக்கு தற்போது வரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி நிறுவனங்களுக்கு தண்ணி காட்ட போகும் ஹூண்டாய் கார்! ரேட் கம்மி! அதான் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

வரும் நாட்களில் நிறைய பேர் முன்பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால், 2023 ஹூண்டாய் வெர்னா விற்பனையில் சாதிக்கலாம். புதிய ஹூண்டாய் வெர்னா காரில், 113 பிஹெச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர 158 பிஹெச்பி பவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் இந்த புதிய மாடல் பெற்றுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், ஐவிடி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் என ஏராளமான அம்சங்கள் புதிய ஹூண்டாய் வெர்னா செடான் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக லெவல் 2 அடாஸ் வசதியும், புதிய ஹூண்டாய் வெர்னா காரில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2023 ஹூண்டாய் வெர்னா காரின் ஆரம்ப விலை வெறும் 10.90 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 17.38 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு இது மிகவும் மதிப்பு வாய்ந்த காராக பார்க்கப்படுகிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இவை அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பின் நாட்களில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே குறைவான விலையில் இந்த செடான் காரை வாங்க விரும்புபவர்கள் கூடிய விரைவில் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

Article Published On: Tuesday, March 21, 2023, 19:53 [IST]
English summary
2023 hyundai verna 8000 bookings full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+