நாடே தவம் கிடக்கும் கார் இன்னும் 3 நாளில் லான்ச் ஆகுது! ஷோரூம்களுக்கு வர தொடங்கியதால் மக்கள் படையெடுக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து செடான் ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna). இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. வரும் மார்ச் 21ம் தேதி புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்களுக்கு புதிய வெர்னா கார் வர தொடங்கியுள்ளது. 2023 ஹூண்டாய் வெர்னா காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டி-ஜிடிஐ இன்ஜின்கள் ஆகும்.

நாடே தவம் கிடக்கும் கார் இன்னும் 3 நாளில் லான்ச் ஆகுது! ஷோரூம்களுக்கு வர தொடங்கியதால் மக்கள் படையெடுக்கறாங்க!

இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும் மற்றும் 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 1.5 லிட்டர் டி-ஜிடிஐ இன்ஜினானது அதிகபட்சமாக 158 பிஹெச்பி பவரையும் மற்றும் 253 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாடே தவம் கிடக்கும் கார் இன்னும் 3 நாளில் லான்ச் ஆகுது! ஷோரூம்களுக்கு வர தொடங்கியதால் மக்கள் படையெடுக்கறாங்க!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஹோண்டா சிட்டி (Honda City), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களுக்கு, புதிய ஹூண்டாய் வெர்னா விற்பனையில் சவால் அளிக்கும்.

இந்திய சந்தையில் தற்போது செடான் ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வரும் தற்போதைய நிலையில், செடான் செக்மெண்ட்டை புதிய ஹூண்டாய் வெர்னா ஓரளவிற்கு சரிவில் இருந்து மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடல்களின் வருகை காரணமாக, இந்தியாவின் செடான் செக்மெண்ட் ஓரளவிற்கு எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியான மார்ச் 21 அன்றுதான், புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 23:24 [IST]
English summary
2023 hyundai verna arrives at dealerships in india all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+