பளபளக்கும் ப்ரவுன் நிறத்தில் முதல் கஸ்டமரை சென்றடைந்தது 2023 ஹூண்டாய் வெர்னா -இனி தான் ஆட்டம் சூடுப்பிடிக்கும்

புதிய வெர்னா கார் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முதல் புதிய வெர்னா கார் அதன் வாடிக்கையாளரை சென்றடைந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வெர்னா காரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து இந்த காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளையும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. பழைய வெர்னா செடான் கார் ஒவ்வொரு மாதத்திலும் 1,500இல் இருந்து 2,000 யூனிட்கள் விற்பனையாகி வந்தது. புதிய வெர்னா காரின் விற்பனையை இதனை காட்டிலும் டபுள் மடங்காக எதிர்பார்க்கிறோம்.

வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ள முதல் வெர்னா கார் டெல்லுரியன் ப்ரவுன் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டதாக உள்ளதை மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். புதிய வெர்னா காருக்கு ஹூண்டாய் வழங்கியுள்ள 7 விதமான மோனோ டோன் பெயிண்ட் தேர்வுகளுள் இந்த டெல்லுரியன் ப்ரவுன் ஒன்றாகும். இந்த பெயிண்ட் நிறத்திற்கு ஏற்ப கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் முதலாவதாக டெலிவிரி செய்யப்பட்டுள்ள இந்த வெர்னா காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் வாடிக்கையாளரை முதலாவதாக சென்றடைந்துள்ள இந்த குறிப்பிட்ட மாடல் ஆனது 1.5 லிட்டர் டர்போ வேரியண்ட் ஆகும். அதாவது இந்த குறிப்பிட்ட வெர்னா காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக சந்தையில் ஒரு கார் அறிமுகம் செய்யப்படுகிறது எனில், அதன் டெலிவிரிகள் குறைந்தது சில வாரங்கள் கழித்தே துவங்கப்படும். ஆனால் புதிய வெர்னாவின் டெலிவிரிகளை அறிமுகமான சில நாட்களிலேயே ஹூண்டாய் துவங்கியுள்ளது.

பளபளக்கும் ப்ரவுன் நிறத்தில் முதல் 2023 வெர்னா கார் டெலிவிரி

2023 ஹூண்டாய் வெர்னா காரின் முன்பக்கத்தில் அகலமான க்ரில், அதன் இரு பக்கங்களிலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், இரு ஹெட்லைட்களை இணைக்கும் எல்இடி லைட் பார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பின்பக்கத்தில் L-வடிவில் எல்இடி டெயில்லைட்களும், முன்பக்கத்தை போல் பின்பக்கத்திலும் டெயில்லைட்களை இணைக்கும் வகையில் எல்இடி லைட் பாரும் வழங்கப்பட்டுள்ளது. புதிய வெர்னாவின் முன் & பின் பம்பர்களின் டிசைன் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

கதவு ஹேண்டில்கள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டவைகளாக உள்ளன. இதனால் புதிய வெர்னா கார் எல்லா பக்கங்களிலும் பளபளக்கக் கூடியதாக உள்ளது. இதற்கேற்ப காரின் உட்பக்க கேபின் தோற்றமும் சிறப்பானதாக வழங்கப்பட்டுள்ளது. புதிய வெர்னாவின் கேபினில் பல அம்சங்கள் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஸ்விட்ச் செய்யக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலை சொல்லலாம்.

பளபளக்கும் ப்ரவுன் நிறத்தில் முதல் 2023 வெர்னா கார் டெலிவிரி

அத்துடன் ஹீட்டட் மற்றும் வெண்டிலேட்டட் இருக்கைகளை முன்பக்கத்தில் இந்த கார் பெற்றுள்ளது. மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், எலக்ட்ரிக் சன்ரூஃப், 10.25-இன்ச் எச்டி ஆடியோ வீடியோ நாவிகேஷன் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக லெவல்-2 அடாஸ் வசதிகள் புதிய வெர்னா காரில் இடம் பெற்றுள்ளன. மாடர்ன் கார்களில் பிரபலமாகிவரும் இந்த தொகுப்பினால் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஹூண்டாயின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய வெர்னா காரின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுவிட்டன. டீசல் என்ஜினிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் முதல் வெர்னா கார் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பதுதான் இதில் ஹைலைட் ஆகும். இந்தியாவில் விற்பனையாகுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் வெர்னா கார்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 23, 2023, 12:38 [IST]
English summary
2023 hyundai verna car reached its first owner video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+