இந்தியாவே காத்து கிடக்கும் கார் நாளை அறிமுகம்! விலை இவ்ளோதான் இருக்குமா! மாருதி, ஹோண்டாலாம் மண்ட காய போறாங்க!
இந்திய சந்தையில் புதிய தலைமுறை வெர்னா செடான் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் (New-gen Hyundai Verna) நிறுவனம் முழுமையாக தயாராகி விட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இதன் விலை (Price) நாளை (மார்ச் 21) அறிவிக்கப்படவுள்ளது.
ஆம், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் நாளை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்களுக்கு 2023 வெர்னா கார் வர தொடங்கி விட்டது. அத்துடன் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நீங்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்துவதன் மூலம், 2023 ஹூண்டாய் வெர்னா காரை புக்கிங் செய்து கொள்ள முடியும். புத்தம் புதிய ஹூண்டாய் வெர்னா காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது, நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் டர்போசார்ஜ்டு வெர்ஷன்களில் கிடைக்கும்.
இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க் ஆகும். அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 158 பிஹெச்பி மற்றும் 253 என்எம் டார்க் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வசதிகளை பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன் பகுதியில் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு பெரிய சிங்கிள் பீஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவை 2023 ஹூண்டாய் வெர்னா காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
இதுதவிர 2 ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் ட்யூயல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய வசதிகளும் 2023 ஹூண்டாய் வெர்னா காரில் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹூண்டாய் வெர்னா காரை பற்றி தற்போது நமக்கு தெரியாத ஒரு தகவல் என்றால், அது விலைதான்.
அனேகமாக இந்த காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதிகாரப்பூர்வமான விலை நமக்கு நாளைதான் தெரியவரும்.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஹோண்டா சிட்டி (Honda City), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய செடான் கார்களுக்கு, புதிய ஹூண்டாய் வெர்னா விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications