இந்த விலையில் எதிர்பாக்கவே இல்ல! ஹூண்டாயின் புதிய காரால் வெலவெலத்து போன போட்டி நிறுவனங்கள்! செக்மேட்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2023 ஹூண்டாய் வெர்னா (2023 Hyundai Verna) கார், இன்று (மார்ச் 21) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிசைனை பொறுத்தவரையில், இந்த புதிய மாடலின் முன் பகுதியில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய க்ரில் மற்றும் பம்பர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய ட்யூயல் டோன் அலாய் வீல்கள், சுறா துடுப்பு ஆன்டெனா, எல்இடி டெயில்லைட்கள், பின் பகுதியில் புதிய பம்பர் ஆகியவையும் இந்த புதிய மாடலின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இந்த விலையில் எதிர்பாக்கவே இல்ல! ஹூண்டாயின் புதிய காரால் வெலவெலத்து போன போட்டி நிறுவனங்கள்! செக்மேட்!

அதேபோல் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, 2023 வெர்னா காரிலும், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) தொழில்நுட்ப வசதியை இந்த புதிய மாடலின் முக்கியமான ஹைலைட் என்று சொன்னால் மிகையாகாது. இது தற்போது கார்களில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளின் தொகுப்பு ஆகும்.

இதுதவிர 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகியவையும் இந்த காரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன. இவை இரண்டும் ஒரே திரையில் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த வகையிலான வடிவமைப்பிற்கும், வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.

இந்த விலையில் எதிர்பாக்கவே இல்ல! ஹூண்டாயின் புதிய காரால் வெலவெலத்து போன போட்டி நிறுவனங்கள்! செக்மேட்!

இவை எல்லாம் தவிர, எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன் பகுதியில் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் போஸ் 8 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் ஆகிய வசதிகளும் 2023 ஹூண்டாய் வெர்னா காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே அதிக வசதிகளை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 2023 ஹூண்டாய் வெர்னா காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். முந்தைய மாடலில் இருந்த இந்த இன்ஜின், புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விலையில் எதிர்பாக்கவே இல்ல! ஹூண்டாயின் புதிய காரால் வெலவெலத்து போன போட்டி நிறுவனங்கள்! செக்மேட்!

இதுதவிர 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், 2023 ஹூண்டாய் வெர்னா காரில் வழங்கப்பட்டுள்ளது. இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜினானது, அதிகபட்சமாக 158 பிஹெச்பி பவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. 2023 ஹூண்டாய் வெர்னா காரில் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் இல்லை. முன்பு வழங்கப்பட்டு வந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கைவிடப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 10.90 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.38 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு 2023 ஹூண்டாய் வெர்னா மிகச்சிறந்த காராக பார்க்கப்படுகிறது.

மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் ஹோண்டா சிட்டி (Honda City), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய கார்களுக்கு, 2023 ஹூண்டாய் வெர்னா மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Tuesday, March 21, 2023, 15:07 [IST]
English summary
2023 hyundai verna launched in india price features engine all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+