ஹோண்டா சிட்டிக்கு எல்லாம் சங்கு! வேட்டியை வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்! மாருதிக்கும் பெரிய ஆப்பு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹூண்டாய் கார்களில் ஒன்று வெர்னா (Hyundai Verna). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட அடுத்த தலைமுறை (Next-generation) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது.

2023 ஹூண்டாய் வெர்னா காரின் டீசர்கள் தற்போது தொடர்ச்சியாக வெளியாகி கொண்டுள்ளன. அத்துடன் 2023 வெர்னா காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, 2023 வெர்னா காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். முன்பதிவு செய்வதற்கான தொகை வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

ஹோண்டா சிட்டிக்கு எல்லாம் சங்கு! வேட்டியை வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்! மாருதிக்கும் பெரிய ஆப்பு!

2 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்குங்க!

EX, S, SX மற்றும் SX (O) என 2023 ஹூண்டாய் வெர்னா கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அதே சமயம் இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. அவை புத்தம் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும்.

கியர் பாக்ஸை பத்தி சொல்லுங்க!

இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஐவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள இரண்டுமே விரைவில் அமலுக்கு வரவுள்ள ஆர்டிஇ (RDE) விதிமுறைகளுக்கு இணக்கமான இன்ஜின்கள் ஆகும்.

ஹோண்டா சிட்டிக்கு எல்லாம் சங்கு! வேட்டியை வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்! மாருதிக்கும் பெரிய ஆப்பு!

அது என்னங்க ஆர்டிஇ?

Real Driving Emissions என்பதன் சுருக்கம்தான் RDE. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஆர்டிஇ விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து கார் நிறுவனங்களும் இந்த விதிமுறைகளுக்கு தற்போது வேகமாக தயாராகி வருகின்றன. இந்த விதிமுறைகள், டீசல் இன்ஜின் மாடல்களுக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சரி, விஷயத்திற்கு வருவோம்...

சரி, புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காருக்கு வருவோம். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) ஆகிய கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான சவாலை 2023 ஹூண்டாய் வெர்னா ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்காகதான் காத்திருந்தோம்!

இதற்கிடையே புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் இந்திய சந்தையில் வரும் மார்ச் 21ம் தேதி (March 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம்தான் இந்த புதிய மாடலின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஹோண்டா சிட்டியின் புதிய மாடலும் வருது!

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. ஹோண்டா நிறுவனமும் சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Honda City Facelift) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது. ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் மார்ச் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Friday, February 17, 2023, 20:45 [IST]
English summary
2023 hyundai verna official india launch date march 21
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+