நமது சென்னையில் உற்பத்தியாகும் புதிய வெர்னா காரில் இந்த அப்டேட்டை எதிர்பார்க்கல - ஹூண்டாயின் அதிரடியான மூவ்!!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட அதன் புதிய தலைமுறை வெர்னா காரை வருகிற மார்ச் 21ஆம் தேதி அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய செடான் கார் குறித்த டீசர் வீடியோ ஒன்றை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் அதன் வெர்னா செடான் காரை புதிய தோற்றத்தில் நமது இந்தியாவில் தான் வடிவமைத்து உள்ளது. மேலும், நம் நாட்டில் இருந்துதான் புதிய வெர்னா கார் வருகிற மார்ச் 21ஆம் தேதி உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, ஹூண்டாயின் சென்னை தொழிற்சாலையில் இருந்துதான் இந்த கார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட உள்ளது. சென்னை ஹூண்டாய் தொழிற்சாலையில் சமீபத்தில்தான் புதிய வெர்னா கார்களை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டன.

இதற்கிடையில் புதிய தலைமுறை வெர்னா காரை பற்றிய டீசர் வீடியோ ஒன்று அதிகாரப்பூர்வமாக ஹூண்டாய் மோட்டார்ஸின் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் காரின் முழு அகலத்திற்கு வழங்கப்பட்டுள்ள எல்இடி டிஆர்எல் பார்களை காட்டுவதில் இருந்து துவங்கும் இந்த டீசர் வீடியோவில் புதிய வெர்னாவின் உட்பக்க கேபின் பகுதி ஹைலைட்டாக சுட்டிக்காட்ட பட்டுள்ளது.

இந்த வீடியோவில், காரின் புதிய ஸ்டேரிங் சக்கரத்தையும், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் காண முடிகிறது. இதில் குறிப்பாக, ஸ்டேரிங் சக்கரம் ஆனது முற்றிலும் புதியதாக, இதுவரையில் எந்தவொரு ஹூண்டாய் காரிலும் பார்த்தில்லாததாக காட்சியளிக்கிறது. இருப்பினும், இந்த புதிய ஸ்டேரிங் சக்கரத்திலும் வழக்கம்போல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மோட்கள், ப்ளூடூத் & சத்தத்தை அதிகரித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான கண்ட்ரோல் பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இந்த அப்டேட்டை எதிர்பார்க்கல!!

இவற்றுடன், பெடில் ஷிஃப்டர்ஸும் இந்த புதிய ஸ்டேரிங் சக்கரத்தில் உள்ளது. இந்த டீசர் வீடியோவில் காட்டப்பட்டிருப்பது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்ட புதிய வெர்னா கார் ஆகும். 7-ஸ்பீடு ட்யூவல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய டீசர் வீடியோவில் காரின் உட்பக்க டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள இரட்டை திரை செட்-அப்பையும் பார்க்க முடிகிறது. இந்த இரு திரைகளில் ஒன்று டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட், மற்றொன்று முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். இவை இரண்டும் எந்தவொரு சப்போர்ட்டும் இன்றி, ஃப்ரீ-ஸ்டாண்டிங்கில் நிற்பது போன்று வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 3 டிரைவிங் மோட்களையும் புதிய வெர்னா கார் பெற்றுவரவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இந்த அப்டேட்டை எதிர்பார்க்கல!!

ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என்பவை அந்த 3 டிரைவிங் மோட்கள் ஆகும். இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக அடாஸ் (ADAS) என சுருக்கமாக அழைக்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்களையும் புதிய தலைமுறை வெர்னா காரில் ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்கால மாடர்ன் கார்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவரும் அடாஸ் ஹூண்டாய் வெர்னாவில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

தற்சமயம் விற்பனையில் இருக்கும் வெர்னா காரை காட்டிலும் புதிய வெர்னா மாடல் நீளமானது மற்றும் அகலமானது. புதிய வெர்னா காரின் நீளம் 4535மிமீ, அகலம் 1765மிமீ மற்றும் உயரம் 1475மிமீ ஆகும். நீளம் அதிகம் என்பதால், சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் தற்போதைய வெர்னாவை விட புதிய வெர்னாவில் 70மிமீ அதிகமாகும். இ.எக்ஸ், எஸ், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் புதிய வெர்னா கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

Article Published On: Tuesday, March 7, 2023, 10:34 [IST]
English summary
2023 hyundai vernas new steering wheel revealed in new teaser video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+