டாடாவுக்கே விற்பனையில் சரிவா! அதிர்ச்சிக்கே அதிர்ச்சியா இருக்குமே! எவ்ளோ சரிவை அது சந்தித்திருக்கு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)இன் 2023 ஜூலை மாத விற்பனை நிலவரம் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. சென்ற மாதத்தில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒட்டுமொத்தமாக எத்தனை யூனிட்டுகள் விற்பனையாகின?, உள்நாட்டில் எத்தனை யூனிட்டுகள் விற்பனையாகின?, வெளிநாட்டில் எத்தனை யூனிட்டுகள் விற்பனையாகின? இது பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), 2023 ஜூலை மாத விற்பனையில் லேசாக சரிவைச் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, 2022 ஜூலை மாத விற்பனையை விட கணிசமான குறைந்த அளவிலேயே 2023 ஜூலையில் டாடாவின் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 2022 ஜூலையில் 81,790 யூனிட்டுகள் டாடா வாகனங்கள் விற்பனையாகிய நிலையில், ஜூலை 2023 மாதத்தில் 80,663 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. கிட்டதட்ட ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் குறைவாகவே கடந்த மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன.
உள்ளூர் மற்றும் வெளியூர் என இரண்டிலும் விற்பனையாகிய எண்ணிக்கையே இவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்படி என்றால் உள்ளூரில் மட்டும் எத்தனை யூனிட்டுகள் டாடாவின் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கக் கூடும். 78,844 யூனிட்டுகளே விற்பனையாகி இருக்கின்றன.

அதுவே, 2022 ஜூலை மாதத்தில் உள்ளூரில் மட்டும் 78,978 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. எனவே, சென்ற மாதத்தில் உள்ளூர் விற்பனையிலும் டாடா லேசான சரிவையேச் சந்தித்து இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. அதேநேரத்தில் உள்ளுரில் பயணிகள் வாகனங்கள் மட்டும் எத்தனை யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு தெரியுமா?, ஒட்டுமொத்தமாக 47,628 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.
ஜூலை 2022 இல் உள்ளூரில் 47,505 யூனிட்டுகள் டாடாவின் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் டாடாவின் பயணிகள் வாகனங்களுக்கு உள்ளூரில் நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது தெளிவாக வருகின்றது. இந்த விஷயத்தில் டாடாவிற்கு எந்த கஷ்டமும் இந்தியாவில் ஏற்படவில்லை என்பதும் தெளிவாக தெரிகின்றது.

மேலும், இதுவே அந்நிறுவனத்திற்கு ஆறுதலாகவும் அமைந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் மின்சார கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், டாடாவின் நெக்ஸான் இவிக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி பிளஸ் என இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை மட்டுமில்லைங்க டாடா மோட்டார்ஸ் டியாகோ இவி மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் மலிவு விலை மின்சார காராக டியாகோ இவி இருக்கின்றது. இந்த கார்களின் வரிசையில் விரைவில் கர்வ் இவி, அல்ட்ராஸ் இவி, பஞ்ச் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களையும் அது விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதில் எந்த மாடல் முதலில் விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. இருப்பினும், அல்ட்ராஸ் இவி அல்லது பஞ்ச் இவி இரண்டில் ஏதேனும் ஒன்றே முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் பயணிகள் வாகனங்களுக்கு என தனித்துவமான வரவேற்பு இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே 2023 ஜூலை மாத விற்பனை விபரம் அமைந்திருக்கின்றது. இதே விற்பனை வரவேற்பே அடுத்தடுத்து வரும் நாட்களிலும் இந்தியாவின் பயணிகள் வாகனங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









