ஹோண்டா கார் எல்லாம் இந்த கியா காருக்கு முன்னாடி கிட்ட கூட நெருங்க முடியாது!! 2023 செல்டோஸ் vs ஹோண்டா எலேவேட்

கியா செல்டோஸ் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஜூலை 4) வெளியீடு செய்யப்பட்டுள்ளது. காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோன்று ஹோண்டா சார்பில் சமீபத்தில் எலேவேட் என்ற பெயரில் காம்பெக்ட் எஸ்யூவி கார் வெளியீடு செய்யப்பட்டது. இந்த இரு எஸ்யூவி கார்களில் எது சிறந்தது? என்பதை இனி பார்க்கலாம்.

என்ஜின்: புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் மிக முக்கிய அப்டேட்டாக புதிய 1.5 லிட்டர், இன்லைன் 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை கியா நிறுவனம் வழங்கியுள்ளது. ஹூண்டாய் அல்கஸார் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெர்னா செடான் காரை தொடர்ந்து தற்போது கியா செல்டோஸிலும் வழங்கப்பட்டுள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2023 kia seltos facelift vs honda elevate

இந்த புதிய டர்போ என்ஜின் உடன் சேர்த்து மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் 2023 கியா செல்டோஸ் கார் கிடைக்கும். 1.5 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் என்பவை மற்ற 2 என்ஜின் தேர்வுகளாகும். புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் கியர்பாக்ஸ் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஐஎம்டி, டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக், சிவிடி ஆட்டோமேட்டிக் & ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மறுப்பக்கம், ஹோண்டா எலேவேட் காரில் 1.5 லிட்டர், இன்லைன் 4-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 121 பிஎஸ் மற்றும் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2023 kia seltos facelift vs honda elevate

தொழிற்நுட்ப வசதிகள்: புதிய செல்டோஸ் காரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடாஸ் 17 செயல்பாடுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பனோராமிக் சன்ரூஃப், ட்யூயல்-ஸோன் வெப்பநிலை கண்ட்ரோல், 8-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, புதிய 10.25-இன்ச் ட்யூயல்-ஸ்க்ரீன் செட்அப் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவையும் உள்ளன.

மேலும், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, வெண்டிலேட்டட் இருக்கைகள், இஎஸ்பி, 6 ஏர்பேக்குகள், கனெக்டட் கார் தொழிற்நுட்பம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பயணிகள் & வாகனத்திற்கான பாதுகாப்பு வசதிகளின் எண்ணிக்கை 15இல் இருந்து 32ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா எலேவேட் காரிலும் அடாஸ் வழங்கப்பட்டுள்ளது. உட்பக்க மேற்கூரையில் எலக்ட்ரிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது.

2023 kia seltos facelift vs honda elevate

இவற்றுடன், ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு உடன் கனெக்டட் கார் தொழிற்நுட்பம், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், லேன்-வாட்ச் கேமரா, ரியர்வியூ கேமரா, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் எல்இடி ஹெட்லைட்கள் போன்ற செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள அம்சங்களும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹோண்டா எலேவேட் இரண்டில் எல்லா விதங்களிலும் செல்டோஸ் மாடலின் கை தான் ஓங்கியுள்ளது என சொல்ல வேண்டும். ஏனெனில் செல்டோஸில் ஏகப்பட்ட என்ஜின் & கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எலேவேட் காரை டீசல் என்ஜின் உடன் பெற முடியாது. தொழிற்நுட்ப அம்சங்களும் எலேவேட் காரில் குறைவே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 4, 2023, 19:22 [IST]
English summary
2023 kia seltos facelift vs honda elevate comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X