இந்தியாவில் கியாவுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த கார் ஆச்சே... செல்டோஸில் இப்படியொரு என்ஜின் தேர்வு நீக்கமா!!

இந்தியாவில் கியா நிறுவனத்திற்கு ஒரு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த கார் என்றால் அது செல்டோஸ் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய செல்டோஸ் எஸ்யூவி காரை கியா நிறுவனம் புதிய அப்டேட்களுடன் அறிமுகம் செய்துள்ளது. அந்த அப்டேட்களை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறையின் 2ஆம் கட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதை அடுத்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதற்கேற்ப தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஆர்டிஇ மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப கியா நிறுவனம் கொண்டுவந்துள்ள புதிய கார் தான் 2023 செல்டோஸ் ஆகும். புதிய செல்டோஸ் எஸ்யூவியின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.10.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செல்டோஸில் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வை நீக்கியுள்ள கியா!!

2023 செல்டோஸ் காரில் புதிய வசதிகளையும், புதிய கியர்பாக்ஸ் தேர்வையும் கியா நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், இதற்கேற்ப காரின் விலைகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக செல்டோஸில் வழங்கப்பட்டு வந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த டர்போ என்ஜின் உடன் வழங்கப்பட்டு வந்த டிசிடி கியர்பாக்ஸையும் செல்டோஸ் காரில் பெற முடியாது.

டர்போ என்ஜின் தேர்வு நிறுத்தப்பட்டுள்ளதால், 2023 கியா செல்டோஸ் காரை 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் மட்டுமே பெற முடியும். இதில் பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் உடன் பெறலாம். மறுப்பக்கம் டீசல் என்ஜின் முன்பு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் உடன் கிடைத்து வந்தது. இதில் தற்போது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய 6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

செல்டோஸில் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வை நீக்கியுள்ள கியா!!

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, நீக்கப்பட்டுள்ள 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு பதிலாக விரைவில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வு செல்டோஸில் சேர்க்கப்படலாம். ஏனெனில் இதேபோன்றுதான் கியா கேரன்ஸ் எம்பிவி காரில் சமீபத்தில் 1.4 லிட்டர் டர்போ என்ஜின் தேர்வு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வு சேர்க்கப்பட்டது. இந்த புதிய டர்போ என்ஜின் ஆனது ஹூண்டாய் அல்கஸார் காரிலும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அல்கஸார் மட்டுமின்றி, ஹூண்டாயின் மற்ற கார்களான வெர்னா மற்றும் க்ரெட்டா கார்களிலும் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஏனெனில் இந்த டர்போ என்ஜினை ஹூண்டாய் கார்ஸ் குழுமம் தான் வடிவமைத்துள்ளது. தென் கொரிய கார் பிராண்ட்களான ஹூண்டாயும், கியாவும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

செல்டோஸில் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வை நீக்கியுள்ள கியா!!

இந்த டர்போ என்ஜின் மட்டுமில்லாமல், செல்டோஸில் தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸும் ஹூண்டாய் கார்களில் வழங்கப்படுகின்றது. செல்டோஸ் காரின் தோற்றத்தில் தற்சமயம் எந்த மாற்றத்தையும் கியா மேற்கொள்ளவில்லை. ஏனெனில் இந்த 2023ஆம் வருடம் முடிவதற்கு உள்ளாக செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அப்போது செல்டோஸின் தோற்றத்தில் முக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மேலும், செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வை கியா அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் 2023 செல்டோஸில் மற்றொரு முக்கிய தொழிற்நுட்ப அம்சமாக ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களினால் செல்டோஸின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பை காட்டிலும் ரூ.50,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 16, 2023, 22:57 [IST]
English summary
2023 kia seltos launched with rde standards engine options
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+