இந்த ஒரு கார் கியா மார்கெட்டையே தலைகீழா மாத்தப்போகுது; மாருதி, டாடா எல்லாம் பைத்தியம் புடிச்சு சுத்த போறாங்க

கியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்யூவி காரின் அப்டேட் வெர்ஷனை இன்று இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே தென்கொரியாவில் பூஷன் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே காரை தான் இந்தியாவில் சில மாற்றங்களை செய்து கியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்று. கியா நிறுவனம் இந்தியாவிற்குள் காலடி தடத்தை எடுத்து வைத்ததும் முதல் காராக இந்த செல்டோஸ் காரை தான் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் சிறப்பான விற்பனை தான் கியா நிறுவனம் இந்தியாவில் தன் காலை ஊன்றி நிற்க முக்கியமான காரணமாக அமைந்தது.

2023 Kia Seltos launched

இந்நிலையில் இந்த காரை அப்டேட் செய்து வெளியிட கியா நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி பழைய மாடலில் உள்ள சில விஷயங்களை மட்டும் மாற்றி புதிய கியா செல்டோஸ் காராக முதன் முதலில் தென்கொரியாவில் பூஷன் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரை தான் சில மாற்றங்களுடன் இந்தியாவில் கியா நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

புதிய கியா கார் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. எக்ஸ் லைன், ஜிடி லைன், டெக்லைன் என்ற மூன்று விதமான வேரியண்ட்கள் உள்ளன. இந்த காரில் மொத்தம் மூன்று இன்ஜின் - 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஐந்து கியர் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

2023 Kia Seltos launched

இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இஞ்சினாக இருக்கிறது. இந்த இன்ஜின் தான் இந்த செக்மென்டிலேயே பவர்ஃபுல் இன்ஜினாக இருக்கிறது. இதே இன்ஜின் தான் கியா கேரன்ஸ் காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கியர் ஆப்ஷன்களை பொறுத்தவரை மொத்தம் 5 கியர் ஆப்ஷன்கள் உள்ளன 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக்,6 ஸ்பீடுடிசிடி,ஐவிடி,6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் ஆகிய கியர் அம்சங்கள் உள்ளன. வேரியன்ட்களின் இன்ஜின்களைப் பொறுத்து கியர் ஆப்ஷன்களும் மாறுபடும்.

கியா நிறுவனம் இந்த செல்டோஸ் காரை அப்டேட் செய்யும்போது மிட்-சைஸில் ஸ்மார்டான எஸ்யூவி காராக இதை வடிவமைத்துள்ளது. இந்த காரில் அடாஸ் 2.0 தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது. இந்த அடாஸ் தொழில்நுட்பம் அதிகமான கார்களில் கிடையாது ஆனால் கியா செல்டோஸ் காரில் இந்த வசதி இருப்பது அதன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அடாஸ் 2.0 தொழில்நுட்பத்தில் முன்பக்கம் விபத்தை தவிர்க்கும் அசிஸ்டென்ட்ஸ், பிளைன்ட் ஸ்பாட்டில் விபத்தை தவிர்க்கும் எச்சரிக்கை, லேன் கீப் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட 17 ஆட்டோமேட்டிக் டிரைவர் அசிஸ்டென்ஸ் இதில் இருக்கிறது. இதனால் இந்த காரை ஓட்டுவது மிகவும் சுலபமாக இருக்கும்.

இது போக இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக அனைத்து வேரியண்டுகளிலும் 15 பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக டாப் வேரியண்டில் 32 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் பாதுகாப்பான காரில் ஒன்றாக வருவதற்கு கூட வாய்ப்புள்ளது. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வரும் போது தான் இது தெரியவரும்.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் காரின் உட்புறத்தை பொருத்தவரை முக்கிய மாற்றமாக இதில் வாய்ஸ் கண்ட்ரோல் பானரோமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக டூயல் சோன் ஆட்டோமேட்டிக் ஏசி வழங்கப்பட்டுள்ளது. இதில் 10.25 இன்ச் அளவிலான டூயல் பானராமிக் டிஸ்ப்ளே இருக்கிறது. அதில் ஒன்று டிரைவருக்கான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டராகவும் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்டாகவும் வேலை செய்யும்.

இதுபோக டிரைவர் சீட் வென்லேட்டர் சீட்டாகவும் 8 பவர் அட்ஜெஸ்ட்மென்ட் ஆப்ஷன் உடனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ஐஎம்டி கியர் பாக்ஸை பொருத்தவரை கிளட்ச் இல்லாமல் இயங்கும் அட்வான்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கியர் பாக்ஸ் கொண்ட காரை ஓட்டுவது எளிதாக இருக்கும் குறிப்பாக பெண்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

இதுபோக இந்த காரில் ஆம்பியன்ஸ் லைட்டிங், ஏர் பியூரிஃபையர், 8 ஸ்பீக்கர் பாஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட உட்புற தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த கார் மொத்தம் எட்டு விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அது போக இரண்டு டூயல் டோன் ஆப்ஷனும் ஒரு எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராஃபிக் கலர் ஆப்ஷனும் இந்த புதிய செல்டோஸ் காரில் இருக்கிறது.

இந்த காரின் வெளிப்புறத்தில் சீக்கோன்ஷியல் எல்இடி டெயில் லைட் ,ஸ்மார்ட் எல்இடி லைட்டிங், டூயல் ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்ட் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.வெளிப்புறத்தில் வீலைப் பொறுத்தவரை கிரிஸ்டல் கட் கருப்பு நிற அலாய் வில் பொருத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்த கார் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வ அறிமுகம் பின்னர் அறிவிக்கப்படும். விலையும் அப்பொழுது தான் தெரியவரும்.

இந்த காருக்கான புக்கிங் வரும் 14ஆம் தேதி துவங்குகிறது. வெப்சைட் மற்றும் கியா ஆப் மூலம் புக் செய்பவர்களுக்கு என்று கே-கோடு வழங்கப்படும். அதுவும் 14ஆம் தேதி 12:00 மணி முதல் இரவு 11:59 வரை புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த கே-கோடு வழங்கப்படும். இந்த காருக்கான டெலிவரி துவங்கும் போது கே-கோடு உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டெலிவரியில் முன்னுரிமை வழங்கப்படும். கே-கோடு அல்லாத புக்கிங்கும் அதே நாளில் தொடங்குகிறது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் நீண்ட எதிர்பார்ப்பிற்கு இடையில் களம் இறங்கியுள்ளது. பலர் இந்த காரை வாங்குவதற்காக வேறு எந்த காரையும் வாங்காமல் காத்திருக்கின்றனர். இந்த கார் புக்கிங் துவங்கும்போதே ஏகப்பட்ட மக்கள் இந்த காரை புக் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ரீதியிலான விற்பனையை அதிகரிக்க கே-கோடு முறையை கியா கொண்டு வந்துள்ளது வரவேற்க்க தக்கது தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 4, 2023, 13:35 [IST]
English summary
2023 kia seltos launched engine features and booking info
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+