பணக்காரர்கள் எதிர்பார்த்த லெக்ஸஸ் காருக்கு டெலிவிரி இந்தியாவில் ஸ்டார்ட்!! ஹைப்ரீட்டில் என்ஜின் உடன்...
லெக்ஸஸ் ஆர்.எக்ஸ் (Lexus RX) லக்சரி எஸ்யூவி காரின் 350எச் வேரியண்ட்டிற்கான டெலிவிரி பணிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், இந்த லெக்ஸஸ் சொகுசு காரை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் சந்தையில் 2023 ஆர்.எக்ஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்.எக்ஸ்350எச் மற்றும் ஆர்.எக்ஸ்500எச் எஃப்-ஸ்போர்ட் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் 2023 ஆர்.எக்ஸ் காரை லெக்ஸஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் உடன் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராங்க் ஹைப்ரீட் காரான இதன் முன்பதிவுகள் சமீபத்தில் துவங்கப்பட்டன. இந்தியர்கள் சமீப காலமாக ஹைப்ரீட் கார்களுக்கும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக, 2023 லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் வேரியண்ட்டிற்கு மிகவும் சிறப்பான வரவேற்பு இந்தியாவில் கிடைத்து வருவதாக லெக்ஸஸ் கூறும் நிலையில், இந்த காருக்கான டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதனால் 2023 லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் லக்சரி எஸ்யூவி காரை முன்பதிவு செய்தவர்கள் காரை டெலிவிரி எடுக்க தயாராகி வருகின்றனர். புதிய ஆர்.எக்ஸ்350எச் வேரியண்ட்டில் 2.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அமைப்பு மூலமாக அதிகப்பட்சமாக 245 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெறலாம்.

என்ஜினின் இந்த இயக்க ஆற்றல்கள் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக காரின் 4 சக்கரங்களுக்கும் செல்லும். ஆம்... லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் ஆனது ஓர் 4x4 எஸ்யூவி கார் ஆகும். இதனுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுவதால், 2023 ஆர்.எக்ஸ்350எச் காரின் செயல்படுதிறன் மிகவும் சிறப்பாக இருக்கும்.
0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு 200kmph ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு விற்பனையில் இருந்த லெக்ஸஸ் ஆர்.எக்ஸ் எஸ்யூவி கார் உடன் ஒப்பிடுகையில் 2023 மாடல் 25மிமீ கூடுதல் அகலமானது மற்றும் 60மிமீ கூடுதல் நீளமான வீல்பேஸை கொண்டது. காரின் அகலம் & வீல்பேஸ் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உட்பக்கத்தில் கூடுதல் விசாலமான லெக்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் வசதி கிடைக்கும்.

இந்தியாவில் லெக்ஸஸ் ஆர்.எக்ஸ் எஸ்யூவி காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஆடி க்யூ7, ஜாகுவார் எஃப்-பேஸ், ரேஞ்ச் ரோவர் வேலார், வால்வோ எக்ஸ்.சி90 மற்றும் ஜீப் கிராண்ட் செரோக்கி உள்ளிட்டவை விற்பனையில் போட்டியாக விளங்குகின்றன. அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் இந்திய சந்தையில் 2023 லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.95.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த செய்தியில் நாம் மொத்தமாக ஆர்.எக்ஸ்350எச் வேரியண்ட்டை பற்றி மட்டுமே பார்த்துள்ளோம், ஆர்.எக்ஸ்500எச் எஃப்-ஸ்போர்ட் வேரியண்ட்டை பற்றி இல்லை. இந்த கூடுதல் விலைமிக்க வேரியண்ட்டின் டெலிவிரிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் லெக்ஸஸ் ஆர்.எக்ஸ் காரின் வெற்றிக்கு அதன் 350எச் வேரியண்ட் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.


Click it and Unblock the Notifications









