மாருதி பலேனோ காரில் இப்படி ஒரு அப்டேட்டா? இதை யாருமே எதிர்பார்க்கலயே!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் தனது பிரபலமான பிரிமியம் ஹேட்ச் பேக் காரான பலேனோ காரில் புதிய பாதுகாப்பு அப்டேட் ஒன்றை செய்துள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த அப்டேட் தற்போது வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டாகி வருகிறது. போட்டியாளர்கள் இடையே நெருங்க முடியாத அளவிற்கான விற்பனையை மாருதி நிறுவனம் பெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் நம்பர் 1 இடத்தில் தான் இந்நிறுவனம் இருக்கிறது.

இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக பலேனோ கார் இருக்கிறது. இந்த காரை அவ்வப்போது மாருதி நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2023 பலேனோ சிக்மா வேரியண்ட் குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் யூட்யூபில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் மாருதி நிறுவனம் இந்த காரில் செய்துள்ள பாதுகாப்பு குறித்த அப்டேட்டுகள் கிடைத்துள்ளது. அதன்படி பலேனோ சிக்மா வேரியண்ட் காரில் பின்பக்கம் உள்ள சீட்டில் நடுவில் ஹெட் ரெஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. இது பயணத்தின் போது பின்பக்கம் உள்ள சீட்டில் உள்ள பயணிக்கு கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

மாருதி நிறுவனம் இது போக பின்பக்கம் 3 பாயிண்ட் சீட் பெல்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பின்பக்கம் நடுவில் உள்ளவர்களுக்கு பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பிற்கு பிறகு இந்த நடவடிக்கையை மாருதி நிறுவனம் எடுத்துள்ளது.
மத்திய அரசு வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளின் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் என கொள்கை எடுத்துள்ளது. அதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் பின்பக்கம் உள்ள சீட்டில் 3 பாயிண்ட் சீட் பெல்டை கட்டாயம் ஆக்கியுள்ளது.

குறிப்பிட்ட இந்த வீடியோவில் 2023 பலேனோ சிக்மா காரின் வெளிப்புறத் தோற்றங்கள் எல்லாம் காட்டப்படுகிறது. இதில் முன் பக்கம் மேட் பிளாக் கிரில் இருக்கிறது. ஆனால் ஃபாக் லேம்ப் இல்லை. இது பேஸ் வேரியன்ட் என்பதால் இதில் ஃபாக் லேம்ப் கிடையாது. ஹெட்லைட் புரொஜெக்டர் ஹிட்லர் செட்டப் உடன் இருக்கிறது.
இந்த காரின் பக்கவாட்டை பொருத்தவரை சில்வர் ஸ்டீல் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது போக கார்பன் பைபர் மிரர் கேப்புகள், குரோம் டோர் ஹேண்டில், விண்டோ வைசர் ஆகியன உள்ளன முக்கியமாக சில்வர் நிற குரோம் பார் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது எடுப்பாக இருக்கிறது.
இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை 2023 பலேனோ சிக்மா காரில் லெதர் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது போக போதுமான இட வசதியும் பயணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் ஏர் கண்டிஷனர் சிஸ்டம் இருக்கிறது. உட்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் வேறு எதுவும் செய்யப்படவில்லை.
இதன் இன்ஜினைப் பொறுத்தவரை பலனோ சிக்மா காரில் 1.2 லிட்டர் கே 12 சி டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 பிஎஸ் பவரை அதிகபட்சமாகவும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. சிக்மா வேரியன்டை பொருத்தவரை மேனுவல் கேர் ஆப்சன் மட்டுமே இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் என்னதான் நல்ல விற்பனை பெற்று வந்தாலும் விபத்துகளில் அதிகம் பாதிப்படையின் காராக பாதுகாப்பு குறைந்த காராக தயாரிப்பதாக மக்கள் மத்தியில் கருத்து நிலை வருகிறது. இந்த கருத்தை மாற்ற மாருதி நிறுவனம் தங்கள் கார்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருகிறது. முக்கியமாக பலேனோ காரில் இந்த அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சம் வரவேற்கத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications









