மாருதி பிரெஸ்ஸா கார் இப்படிப்பட்ட கருப்பு நிறத்தில் பார்க்கவே சூப்பரா இருக்கு... இந்த வீடியோவை பாருங்க!!

அட்டகாசமான தோற்றத்தில், முற்றிலும் கருப்பு நிறத்திலான 2023 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (2023 Maruti Suzuki Brezza) கார் மாருதி சுஸுகியின் அரேனா டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் கார்களில் சிறப்பு கருப்பு பதிப்புகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். முதலாவதாக நெக்ஸா டீலர்ஷிப் மையங்களில் விற்கப்படும் பிரீமியம் தர கார்களின் ப்ளாக் எடிசன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து அரேனா டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்கப்படும் பட்ஜெட் விலை கார்களின் ப்ளாக் எடிசன்களும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த வகையில், பிரெஸ்ஸாவின் ப்ளாக் எடிசனும் விற்பனைக்கு அறிமுகமானது. இந்த நிலையில், 2023 பிரெஸ்ஸா ப்ளாக் எடிசன் கார் அரேனா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். இந்த வீடியோவில் காட்சி தந்து இருப்பது பிரெஸ்ஸாவின் விலைமிக்க வேரியண்ட்களுள் ஒன்றான இசட்.எக்ஸ்.ஐ ஆகும்.

காரின் முன்பக்கத்தை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது. இரட்டை பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டிருக்க, இந்த காரில் ஃபாக் விளக்குகள் எதுவும் இல்லை. ஏனெனில் பிரெஸ்ஸாவில் ஃபாக் விளக்குகள் டாப் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டில் மட்டுமே பொருத்தப்படுகின்றன. முன்பக்கத்தை தொடர்ந்து, காரின் பக்கவாட்டு பகுதியும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

பிரெஸ்ஸா கார் கருப்பு நிறத்தில் பார்க்கவே சூப்பரா இருக்கு!!

காரின் பாடி கலரை போன்று, அலாய் சக்கரங்களும் பளபளப்பான கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பிரெஸ்ஸாவில் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. அத்துடன் இந்த காரின் பக்கவாட்டு பகுதிகளில் கருப்பு நிற கிளாடிங்குகளும் பொருத்தப்படுகின்றன. இவற்றை எல்லாம் காட்டிய பின்னர் பிரெஸ்ஸா ப்ளாக் எடிசனின் பின்பக்கத்தையும் மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காண முடியும்.

இவற்றை காட்டிய பின்னர், இந்த வீடியோவை பதிவு செய்தவர் காரின் உட்பக்க கேபினுக்குள் நுழைகிறார். புதிய பிரெஸ்ஸா ப்ளாக் எடிசனின் கேபினில் பெரியதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. ப்ளாக் எடிசனை தொடர்ந்து, இந்த மார்ச் மாத துவக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி காரையும் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் சிஎன்ஜி கார்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

பிரெஸ்ஸா கார் கருப்பு நிறத்தில் பார்க்கவே சூப்பரா இருக்கு!!

தொழிற்சாலையில் பொருத்தப்படும் சிஎன்ஜி தொகுப்புடன் இந்தியாவின் முதல் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்கும் பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.14 லட்சத்தில் இருந்து ரூ.12.05 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த சிஎன்ஜி காரில் 1.5 லிட்டர் ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி கே-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக 25.51kmpkg வரையிலான மைலேஜை பெறலாம் என்கிறது மாருதி சுஸுகி.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

இவ்வாறு, சந்தையில் பிரெஸ்ஸாவின் வேரியண்ட்கள் வரிசையை தொடர்ந்து அதிகரிக்கும் முனைப்பில் மாருதி சுஸுகி உள்ளது. ஏனெனில் இந்த கார் போட்டிமிகுந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த வகையில் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள ப்ளாக் எடிசன் தோற்றத்தில் அசத்தலாக உள்ளதை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.

Article Published On: Saturday, March 25, 2023, 15:04 [IST]
English summary
2023 maruti suzuki brezza car in all new black colour video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+