மெர்சீடீஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரின் விலை இவ்வளவு கம்மியா? வேற லெவல்ல இருக்குது!
மெர்சீடீஸ் நிறுவனம் தனது ஜிஎல்சி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ 73.5 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனம் தனது ஜிஎல்சி காரை முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் மொத்தம் 2 விதமான வேரியன்ட்களில் வெளியாகிறது. 300 4 மேட்டிக் மற்றும் 220டி மேட்டிக் ஆகிய பெயர்களில் இந்த கார் வெளியாகிறது. மெர்சிடீஸ் நிறுவனத்திலேயே இந்த ஜிஎல்சி கார்கள் தான் அதிகமாக விற்பனையாககூடியது.

இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டது. ரூ1.5 லட்சம் முன்பணம் செலுத்தி பலர் இந்த காரை புக்கிங் செய்து வருகின்றனர். இந்த ஜிஎல்சி கார் உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. இதுவரை இந்த காரை சுமார் 60 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். இந்த காரை இந்தியாவிலேயே முழுமையாக உருவாக்க மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ100 கோடியை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளது.
இந்த ஜிஎல்சி கார் தற்போது வரை இந்தியாவில் 1.6 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தான் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் தயாரிப்பு கடந்த ஜூலை மாதமே துவங்கிவிட்டது. இதன் டெலிவரி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் எப்படி இருக்கிறது என காணலாம் வாருங்கள்.

இந்த காரின் டிசைனை பொருத்தவரை பழைய மாடல் காரிலிருந்து சற்று அத்தலட்டிக் லுக்கில் இருக்கிறது. இதன் லைன் மற்றும் கர்வ்கள் பார்க்க எலெகென்டாக இருக்கிறது. இது பார்க்க பழைய காரை விட அதிக பிரிமியமாக தெரிகிறது. ஆனால் பெரிய அளவில் இதன் அளவுகளில் மாற்றம் இல்லை.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4716 மிமீ நீளம், 2075 மிமீ அகலம், 1650 மிமீ உயரம், என்ற அளவுகளில் இருக்கிறது. பழைய காரிலிருந்து 60 மிமீ அதிக நீளமாகவும், 21 மிமீ அகலம் குறைவாகவும் மற்றும் 4 மிமீ உயரம் குறைவாகவும் இருக்கிறது. வீல் பேஸை பொருத்தவரை பழைய காரிலிருந்து 15 மிமீ நீளமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் உட்பகுதியை பொருத்தவரை மார்டனாக உள்ளது. புதிய தலைமுறை சி கிளாஸ் செடான் காரில் உள்ளது போலவே இதிலும் இருக்கிறது. இந்த காரில் 11.9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ஸ் கிளஸ்டரும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரில் வயர்லெஸ் போன் கனெக்டிவிட்டி, ஹெட் அப் டிஸ்பிளே, 15 ஸ்பீக்கர் பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட்வியூ கேமரா, ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை மெர்சீடீஸ்-பென்ஸ் ஜிஎல்சி 300 4 மேட்டிக் எஸ்யூவி காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 254 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இதுவே மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்சி 220 டி 4 மேட்டிக் காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 194.4 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இரண்டு இன்ஜின்களும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பொருத்தவரை 48 வோல்ட் சிஸ்டம் இன்டகரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டள்ளது. இது காருக்கு கூடுதலாக 26 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனால் காருக்கு கூடுதல் பவர் கிடைக்கிறது. அதிக திறனுடன் இயங்குகிறது.
இந்த புதிய ஜிஎல்சி காரின் 2 வேரியன்ட் இன்ஜினும் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4 மேட்டிக் வேரியன்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆஃப்ரோடிங் அம்சத்திற்காகவும், அனைத்து விதமான கால நிலைகளிலும் கார் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்யவேண்டும் என்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎல்சி 300 4 மேட்டிக் கார் 100 கி.மீ வேகத்தை வெறும் 6.2 நொடியில் எட்டிபிடித்துவிடும். இந்த கார் சராசரியாக 14.72 கி.மீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டது. அதே நேரம் 220 டி 4 மேட்டிக் காரை பொருத்தவரை 100 கி.மீவேகத்தை 8 நொடியில் எட்டி பிடிக்கும் இந்த கார் 19.47 கி.மீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டது.
இந்த காரின் விலையை பொருத்தவரை 300 4 மேட்டிக் வேரியன்ட் ரூ73.5 லட்சம் என்ற விலையிலும், ஜிஎல்சி 220 டி 4 மேட்டிக் வேரியன்ட் ரூ74.5 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்க வருகிறது. இதில் 220 டி 4மேட்டிக் கார் டீசல் இன்ஜினில் இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனால் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் ரூ73.5 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதனால் மார்கெட்டில் கடும் போட்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








