2023 ஸ்கோடா கோடியாக் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை இவ்வளவுதானா? ரொம்ப ‘சீப்’-ஆ இருக்கே!!

2023 ஸ்கோடா கோடியாக் (2023 Skoda Kodiaq) கார் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கோடா காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் விலைமிக்க முழு-அளவு எஸ்யூவி காராக கோடியாக் உள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட 2023ஆம் ஆண்டு மாடல் தான் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைல், ஸ்போர்ட் லைன் மற்றும் எல்&கே என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் புதிய கோடியாக் காரை வாங்கலாம். இதில் ஸ்டைல் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.37.99 லட்சம் ஆகும். இது கோடியாக் காரின் முந்தைய ஆரம்ப விலையை காட்டிலும் ரூ.50,000 அதிகம் ஆகும்.

2023 skoda kodiaq launched

மற்ற ஸ்போர்ட் லைன் மற்றும் எல்&கே வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.39.39 லட்சம் மற்றும் ரூ.41.39 லட்சம் ஆகும். இந்த இரு வேரியண்ட்களின் முந்தைய எக்ஸ்-ஷோரூம் விலைகள் இவற்றை காட்டிலும் முறையே ரூ.90,000 மற்றும் ரூ.1.4 லட்சம் குறைவாக இருந்தன. 2023 கோடியாக் காரில் பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு இணக்கமான 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எவோ டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

மேற்கூறப்பட்ட டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும், இந்த டர்போ என்ஜின் முன்பை காட்டிலும் 4.2% அதிக மைலேஜை வழங்கும் என ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்ப 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.8 வினாடிகளில் எட்டிவிடலாம்.

ஈக்கோ, கம்ஃபர்ட், நார்மல், ஸ்போர்ட், ஸ்னோ என 5 விதமான டிரைவிங் மோட்களை இந்த காரில் பெறலாம். இவை ஐந்தும் இல்லாமல், தனது டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப பிரத்யேகமாக ஒரு டிரைவிங் மோடை உருவாக்கி கொள்ளவும் முடியும். புதிய கோடியாக் காரில் டோர்-எட்ஜ் பாதுகாப்பான்கள், பின்பக்கத்தில் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, காரின் மொத்த தோற்றமும் மெருக்கேறியுள்ளது.

காருக்குள் நுழைய நன்கு விசாலமான படிக்கட்டு உள்ளது. 2023 கோடியாக் காரில் ஸ்டேரிங், டைனாமிக் சேசிஸ் கண்ட்ரோல் அம்சங்களும் உள்ளன. காரின் சஸ்பென்ஷனை 15மிமீ-க்கு உயர்த்தியும், தாழ்த்தி கொள்ளவும் முடியும். இது ஆஃப்-ரோடு பயணத்தின் போது உதவியாக இருக்கும். காருக்கு உள்ளே ஸ்டேரிங் சக்கரத்தை 3-ஸ்போக் அல்லது 2-ஸ்போக்கில் வாங்கலாம். இத்தகைய ஸ்டேரிங் சக்கரத்துடன், கேபினை சுற்றிலும் விளக்குகள், கேண்டன் 625 வாட்ஸ் 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டமும் சப் வூஃப்பர் உடன் உள்ளது.

ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃபை வாடிக்கையாளர்கள் ரிமோட் மூலமாக மூடி/ திறந்து கொள்ளலாம். ஸ்கோடாவின் 7-இருக்கை முழு-அளவு எஸ்யூவி காரான கோடியாக் முதன்முதலாக இந்தியாவில் 2017இல் அறிமுகப்படுத்தப்பட்டது. காரின் விலைகள் மட்டுமே தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர்த்து, இன்னும் புதிய கோடியாக் காருக்கான முன்பதிவுகளை ஸ்கோடா துவங்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சாலையில் அவ்வளவாக காண முடியாத ஸ்கோடா கார்களுள் ஒன்று கோடியாக் எனலாம். ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தம் 1,200 கோடியாக் கார்களை மட்டுமே இந்தியாவிற்கு ஸ்கோடா ஒதுக்கியது. இந்த 1,200 கார்களும் முன்பதிவுகள் துவங்கப்பட்ட 24 மணிநேரத்தில் புக் ஆகிவிட்டன. இதன் காரணமாகவே இந்த முறை சற்று கூடுதலாக 3,000 கோடியாக் கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இனி கோடியாக் கார்களையும் சாலைகளில் அவ்வப்போது காணலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 5, 2023, 14:49 [IST]
English summary
2023 skoda kodiaq full size suv launched in india
மேலும்... #ஸ்கோடா #skoda #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+