இவ்வளவு கம்மி விலையில இத்தனை அம்சங்கள் கொண்ட இவி காரா? வேற லெவல்ல இருக்குதே!
டாடா நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ14.74 லட்சம் முதல் ரூ19.94 லட்சம் என்ற விலையில் இந்த கார்கள் அறிமுகமாகியுள்ளது. இது வெறும் அறிமுக கால விலை தான் பின்னர் இந்த காரின் விலை உயர்த்தப்படும் என தெரிகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது சிறந்த எலெக்ட்ரிக் காரான நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. அப்பொழுதே இந்த கார் மீது மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இன்று இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இந்த கார் இருக்கிறது. டாடா நிறுவனம் தான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் இந்தியாவில் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கிறது.

டாடா நிறுவனத்திற்கு நெக்ஸான் இவி விற்பனை சிறப்பான அளவில் உதவி செய்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த காரின் டிசைன், அம்சங்கள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகிய விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் தனது வெளிப்புற டிசைனை பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.டாடா நிறுவனம் ஏற்கனவே 53 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதனால் இதன் அப்டேட்டட் காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டாடா நிறுவனம் தனது ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் காரின் டிசைனை பொருத்தவரை அந்நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள கர்வ் என்ற எலெக்ட்ரிக் காரின் டிசைன ஒத்து மாற்றியமைத்துள்ளது. கர்வ் கான்செப்ட் காரில் உள்ள பல டிசைனை இதில் பார்க்க முடிகிறது. இந்த காரை பொருத்தவரை பெட்ரோல் காரை போல 6 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. கிரியேட்டிவ்+, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+,ஃபியர்லெஸ்+எஸ், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ ஆகிய வேயன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
இதன் பேட்டரி ஆப்ஷனை பொருத்தவரை 2 வேறு பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. மிட்ரேஞ்ச் மற்றும் லாங்ரேஞ்ச் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கிறது. மிட்ரேஞ்ச் பேட்டரி கொண்ட நெக்ஸான் இவி கார் ரூ14.74லட்சம் முதல் ரூ17.84 என்ற விலையில் விற்பனைக்கு, லாங் ரேஞ்ச் விற்பனையை பொருத்தவரை கிரியேட்டிவ்+ மற்றும் எம்பவர்டு வேரியன்ட்கள் மட்டுமே விற்பனைக்க வருகிறது. இது முறையே ரூ18.19 லட்சம் முதல் ரூ19.94லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை பெட்ரோல்/டீசல் ஃபேஸ்லிஃப்ட் காரை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் முன்பக்கம் உள்ள தனி எல்இடி டிஆர்எல்க்கு பதிலாக முழு நீள எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. இது சார்ஜ்ஏறும் போது பேட்டரியை அளவை காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட் டிசைன் பொருத்தவரை ஸ்பிளிட் ஹெட்லைட் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வித்தியாசம் கிரில் டிசைன் இவியில் ஸ்லாட்டட் கிரில் டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நெக்ஸான் இவி காரில் 16 இன்ச் அலாய் பிளேடு ஸ்டைல் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க வடிவமைப்பை பொருத்தவரை பெட்ரோல்/டீசல் காரில் உள்ள அதே டிசைன் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மத்தியில் எல்இடி பிரேக் லைட் வழங்கப்பட்டுள்ளது. பம்பர் அக்ரஸிவான லுக்கில் இருக்கிறது. இதில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பின்கபக்கம் நெக்ஸான் இவி பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தை பெஆருத்தவரை நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள அதே அம்சங்கள் தான் உள்ளது. உள்ளே கிளீனான, மினிமலான டிசைன் அம்சங்கள் தான் உள்ளது. .ள்ள 12.23 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் காரில் 10.25 இன்ச் ஸ்கிரீன் தான் இருக்கிறது. எச்விஏசி கண்ட்ரோல் அதே மாதிரியாக தான் உள்ளது. டெம்பிரேட்ச்சர் மற்றும் புளோயர் ஸ்படிற்காக இரண்டு டாகில் சுவிட்ச்கள் உள்ளது.
இந்த காரிலும் இரண்டு ஸ்போக் ஹை-கிளாஸ் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் இருக்கிறது. மேலும் இந்த காரில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் சீட்கள், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சிஸ்டம், ஏர் ஃப்யூரிஃபயர், சிங்கிள் பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டைப் சி சார்ஜிங் போர்ட், வயர்லெஸ் சார்ஜர், டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ ஓடிடி தளம், ஆகியவை உள்ளன.
இந்த காரின் மிட் ரேஞ்ச் பேட்டரி கொண்ட வேரியன்ட்களில் 30 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லாங் ரேஞ்ச் வேரியன்ட்களில் 40.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மிட்ரேஞ்ச் பேட்டரி கொண்ட வாகனங்கள் முழு சார்பில் 325 கி.மீ ரேஞ்சையும், லாங்ரேஞ்ச் பேட்டரி கொண்ட வாகனங்கள் முழு சார்ஜில் 465 கி.மீ ரேஞ்ச் கொண்ட வாகனங்களாகவும் விற்பனையாகிறது.
மிட்ரேஞ்ச் பேட்டரி கொண்ட வாகனங்கள் 129எச்பி பவரையும் 215 என்எம் டார்க் திறனையும், லாங் ரேஞ்ச் பேட்டரி கொண்ட வாகனங்கள் 145 எச்பி பவரையும் 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வாகனங்களாக உள்ளன. இது முந்தைய மாடலை விட மிட் ரேஞ்சில் 30 நியூட்டன் மீட்டரையும்ம், லாங் ரேஞ்சில் 38 நியூட்டரன் மீட்டரையும் அதிகம் கொண்டுள்ளது.
லாங்ரேஞ்ச் வேரியன்ட் கார்கள் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.9 நொடியிலும், அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் உடனும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் எக்கோ, சிட்டி, மற்றும் ஸ்போர்ட் ஆகிய 3 டிரைவிங் மோடுகள் உள்ளது. டிரைவர் அவருக்கு தகுந்த மோடை தேர்வு செய்து கொள்ளலாம்..
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் இந்தியாவில் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. அதில் நெக்ஸான் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது. தற்போது அதன் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இந்த கார் விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் சந்தையில் நல்ல இடத்தை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








