டாடா கார்களிலேயே இது தனி ரகம்!! ஹூண்டாய், மஹிந்திரா கார்களில் இல்லாதது இதில் என்ன இருக்கு?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் நெக்ஸான் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. டாடா நெக்ஸானுக்கு விற்பனையில் ஹூண்டாய் மோட்டார்ஸின் வென்யூ, மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 மற்றும் கியாவின் சொனெட் கார்கள் போட்டியாக விளங்குகின்றன.

பரிணாம அளவுகள்: பரிணாம அளவுகளில் புதிய டாடா நெக்ஸான் உயரமான கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்டுள்ளது. அதாவது, தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம் ஆனது ஹூண்டாய் வென்யூ (195மிமீ) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (180மிமீ) உடன் ஒப்பிடுகையில், புதிய நெக்ஸான் காரில் அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், நீளம் மற்றும் உயரத்தில் இந்த 4 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

tata nexon facelift vs competitors

இந்த கார்களின் நீளம் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதை போல், இவற்றின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் ஒரே அளவில் உள்ளது. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் மட்டும் மற்றவைகளை காட்டிலும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை 100மிமீ அதிகமாக கொண்டுள்ளது. புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் அகலம் 1804மிமீ ஆகும். வென்யூவின் அகலம் 1770மிமீ, எக்ஸ்யூவி300-இல் 1821மிமீ மற்றும் சொனெட்டில் 1790மிமீ ஆகும்.

என்ஜின் & கியர்பாக்ஸ்: 2023 நெக்ஸானில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் & 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118.35 பிஎச்பி வரையிலும், டீசல் என்ஜின் 113.42 பிஎச்பி வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல்/ 6-ஸ்பீடு மேனுவல் & ஏஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிஏ கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

tata nexon facelift vs competitors

டாடா நெக்ஸானை போல், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரிலும் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் தான் வழங்கப்பட்டு உள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் ஆனது 129 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால், ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் கார்களில் கூடுதல் டர்போ என்ஜின் ஆப்ஷன் உடன் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப அம்சங்கள்: புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்பக்க டேஸ்போர்டின் டிசைன் முற்றிலுமாக திருத்தப்பட்டு உள்ளது. டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள புதிய 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை பார்ப்போரின் கவனத்தை வெகுவாக கவர்கின்றன. க்ளைமேட் கண்ட்ரோலுக்கு பொத்தான்களுக்கு பதிலாக டச் கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது.

tata nexon facelift vs competitors

வென்யூவில் 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. ஆனால் நெக்ஸானில் உள்ளதை போல், இந்த திரையை வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்க முடியாது. கியா சொனெட்டில் அளவில் பெரியதாக 10.25-இன்ச்சிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி300-இல் அளவில் சிறியதாக 7-இன்ச்சிலும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. இவை இரண்டிலும் இந்த திரை ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக வழங்கப்படுகிறது.

விலை: புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.10 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. நெக்ஸானின் முந்தைய விலைகளை காட்டிலும் இவை சற்று அதிகம் தான் என்றாலும், இந்தியாவில் இப்போதும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் தான்.

tata nexon facelift vs competitors

ஏனெனில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.90 லட்சத்தில் இருந்து ரூ.13.44 லட்சம் வரையிலும், கியா சொனெட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.95 லட்சத்தில் இருந்து ரூ.13.89 லட்சம் வரையிலும் உள்ளன. ஹூண்டாய் கார்களின் விலைகள் பொதுவாகவே சற்று அதிகமாக இருக்கும் என்பதற்கு இணங்க, ஹூண்டாய் வென்யூ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.10.46 லட்சம் ஆகும். அதிகப்பட்சமாக ரூ.13.48 லட்சம் வரையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் கார் கிட்டத்தட்ட 5 வருடங்களாக விற்பனையில் இருந்தாலும், சமீப ஆண்டுகளாகவே நெக்ஸான் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த சில ஆண்டுகளில் பல மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார் நெக்ஸான் ஆகும். ஆனால் கடந்த சில மாதங்களாக நெக்ஸான் கார்களின் விற்பனை சற்று குறைவதை கவனித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சரியாக நெக்ஸானில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை கொண்டுவந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 14, 2023, 22:55 [IST]
English summary
2023 tata nexon facelift vs competitors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X