மனசுக்கு நெருக்கமான கார் ஆச்சே! புதிய அவதாரம் எடுத்தது டாடா சஃபாரி! கதிகலங்கி போன போட்டி நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் டாடா சஃபாரி (Tata Safari). இதன் அப்டேட் செய்யப்பட்ட 2023 மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை (Price) 15.65 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். XE, XM, XMS, XT+, XZ மற்றும் XZ+ ஆகிய வேரியண்ட்களில், 2023 டாடா சஃபாரி விற்பனைக்கு கிடைக்கும். 2023 டாடா சஃபாரி காரில், பிஎஸ்-6 இரண்டாவது கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது RDE என அழைக்கப்படும் Real Driving Emissions விதிமுறைகளுக்கு இணங்க கூடியது.

மனசுக்கு நெருக்கமான கார் ஆச்சே! புதிய அவதாரம் எடுத்தது டாடா சஃபாரி! கதிகலங்கி போன போட்டி நிறுவனங்கள்!

இதுதவிர 2023 டாடா சஃபாரி காரில், அடாஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி ரெட் டார்க் எடிசன் (Tata Safari Red Dark Edition) மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் 2023 டாடா சஃபாரி காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 3,750 ஆர்பிஎம்மில் 168 பிஹெச்பி பவரையும், 1,750-2,500 ஆர்பிஎம்மில் 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் 2023 டாடா சஃபாரி காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

மனசுக்கு நெருக்கமான கார் ஆச்சே! புதிய அவதாரம் எடுத்தது டாடா சஃபாரி! கதிகலங்கி போன போட்டி நிறுவனங்கள்!

10.24 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 இன்ச் டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். இதுதவிர முன் பகுதி மற்றும் 2வது வரிசையில் வென்டிலேட்டட் இருக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த காரின் டிரைவர் இருக்கைக்கு மெமரி ஃபங்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களில் பாதுகாப்பு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. 2023 டாடா சஃபாரி காரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 6 ஏர்பேக்குகள் மற்றும் ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்றவை பாதுகாப்பு வசதிகள் இங்கே குறிப்பிடத்தக்கவை.

எல்லாவற்றுக்கும் மேலாக 2023 டாடா சஃபாரி காரில் அடாஸ் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் 2023 டாடா சஃபாரி காரின் ஆரம்ப விலை 15.65 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 24.82 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரும் விலையாகும்.

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) போன்ற கார்களுடன் டாடா சஃபாரி போட்டியிட்டு வருகிறது. இதன் 2023 மாடலின் வருகை, போட்டி மாடல்களுக்கு விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, February 26, 2023, 8:58 [IST]
English summary
2023 tata safari full details inside
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+