உல்லாச கப்பலயே தூக்கி சாப்பிடும் புது டொயோட்டா இன்னோவா! போட்டி கீட்டினு யாராச்சும் இருந்தா இப்பவே ஒதுங்கீருங்க
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, இந்திய வாடிக்கையாளர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான கார் ஆகும். எனவே அனைவரும் நேசிக்க கூடிய காராக இது உள்ளது.
இந்த சூழலில் அப்டேட் செய்யப்பட்ட 2023 இன்னோவா க்ரிஸ்ட்டா காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் தற்போது மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. விலை (Price) எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அப்டேட் செய்யப்பட்ட 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது.

2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் முன் பகுதியில் புதிய பம்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் சமீபத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதனுடன் சேர்த்து, 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் விற்பனை செய்யப்படவுள்ளது.
2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர், டீசல் (Diesel) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாடலில், பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. ஆனால் 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வசதிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமிருக்காது என உறுதியாக சொல்ல முடியும்.
இந்த புதிய மாடலில், 7 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அஸிஸ்ட் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் பின் பகுதியில் ஏசி வெண்ட்கள் என ஏராளமான அதிநவீன வசதிகள் எல்லாம் 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை தொடர்ந்து, மற்றொரு எம்பிவி ரக கார் ஒன்றையும் டொயோட்டா நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம், மாருதி சுஸுகி எர்டிகா காரை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) என்ற பெயரில் இந்த புதிய மாடல் வரலாம். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பிடும்போது விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய மாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








