2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அறிமுகம்!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா? வேறென்ன புதிய அப்டேட்கள்?
ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Volkswagen India) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அதன் 2023 டிகுவான் எஸ்யூவி (2023 Tiguan SUV) காரை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய டிகுவானில் என்னென்ன அம்சங்கள் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இன்றைய கால மாடர்ன் கார்களில் அடாஸ் (ADAS) எனப்படும் ஓட்டுனர் உதவி வசதிகள் அடங்கிய தொகுப்பு பரவலாக வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அடாஸ் வசதிகள் நிலை-1 மற்றும் நிலை-2 என்ற நிலைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் 2023 டிகுவானில் நிலை-1 அடாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏகப்பட்ட அப்கிரேட்களும் இந்த எஸ்யூவி காரில் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகனின் அறிக்கையின்படி, புதிய டிகுவான் எஸ்யூவி காரில் அப்டேட் செய்யப்பட்ட 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது முன்பை விட 7% அதிக செயல்படுதிறனை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த டிஎஸ்ஐ என்ஜினின் மூலமாக 13.54kmpl மைலேஜை பெறலாம் என ARAI சான்றளிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கூறப்பட்ட 2.0 லிட்டர் டர்போ என்ஜின் பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ரியல்-டிரைவ் எமிஷனுக்கு இணக்கமானதாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
அதிகப்பட்சமாக 187.7 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. காரின் தோற்றத்தை பொறுத்தவரையில், பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. முன்பக்கத்தில் க்ரில் சற்று அகலமாக்கப்பட்டு உள்ளது. முன் மற்றும் பின்பக்கத்தில் டார்க்கெண்ட் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

2023 டிகுவான் காரின் உட்பக்கம் ஸ்ட்ரோம் கிரே நிறத்தில் ட்யூயல்-டோனில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் கேபினில் வயர்லெஸ் மொபைல் சார்ஜர், 10-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சைகை கண்ட்ரோல் உடன் 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் பார்க்கிங் உதவிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், ரியர் சீட்பெல்ட் ரிமைண்டர், ஏபிஎஸ், இஎஸ்சி, ஆண்டி-ஸ்லிப் ரெகுலேஷன், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், ஆக்டிவ் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், 3-பாயிண்ட் சீட் பெல்ட்ஸ், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கிகள் மற்றும் டிரைவர் அலார்ட் சிஸ்டங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட டிகுவான் எஸ்யூவி காரை மொத்தம் 5 விதமான பெயிண்ட் தேர்வுகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது . நைட் ஷேட் நீலம், பேர்ல் எஃபெக்ட் உடன் ஆரிக்ஸ் வெள்ளை, அடர் நீலம், டால்பின் கிரே மற்றும் ரெஃப்ளக்ஸ் சில்வர் என்பவை அந்த 5 பெயிண்ட் தேர்வுகளாகும். 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.34.69 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பல வெளிநாடுகளில் டிகுவான் சிறந்த விற்பனை காராக உள்ளது, ஆனால் நம் இந்தியாவில் இல்லை. ஏனெனில் நம் நாட்டு சந்தையை பொறுத்தவரையில், டிகுவான் விலைமிக்க காராக பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப இந்த காரில் பிரீமியம் தரத்திலான அம்சங்கள் வழங்கப்படுகின்றன என்றாலும், நம் நாட்டில் பெரும்பாலானோர் பட்ஜெட் விலையிலேயே காரை எதிர்பார்க்கின்றனர். இதற்காக டைகுன் எஸ்யூவி காரும் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ளது.


Click it and Unblock the Notifications









