இதுக்காக தான் நாடே காத்துகிடக்குது! நாளை அறிமுகமாகபோகும் டஸ்டர் காரில் என்ன எதிர்பார்க்கலாம்?

ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் சர்வதேச அளவில் டேஷிகா என்ற நிறுவனத்தின் பெயரில் நாளை முதன்முறையாக தனது மூன்றாவது தலைமுறை கார் அறிமுகமாக உள்ள நிலையில், இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? என்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விவரத்தை தான் இங்கே நாம் காண போகிறோம்.

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தன் காலடி தடத்தை பதிக்கும்போது டஸ்டர் என்ற காரை அறிமுகப்படுத்தியது. அந்த கார் இந்தியாவின் மூலை முடுக்குகள் எங்கும் பிரபலமானது. மக்கள் விரும்பி வாங்கும் காராக அந்த கார் இருந்தது. இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மவுசு அதிகமாகும் நிலையில் மிட் சைஸ் எஸ்யூவி காரை இந்திய மக்களுக்கு கொண்டு சேர்த்த கார்களில் இந்த டஸ்டர் காரும் ஒரு முக்கியமான காராக இருக்கிறது.

2024 duster launch

இந்நிலையில் ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரின் மூன்றாவது தலைமுறை காரை தயாரித்துள்ளது. இந்த காரின் சர்வதேச அறிமுகம் நாளை நடைபெற உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் நிறுவனத்தின் மூலம் இந்த கார் சர்வதேச அளவில் அறிமுகமாக உள்ளது. ஐரோப்ப மார்க்கெட்டிற்காக போர்ச்சுகல் நாட்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த காரின் அறிமுகத்தை முன்னிட்டு இந்த கார் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

புதிய தலைமுறை டஸ்டர் காரை பொருத்தவரை சில புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன. அதன்படி இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வெளியான டிசைனை ஒத்தை இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிக்ஸ்டர் கான்செப்ட் காரில் உள்ள பல்வேறு டிசைன்கள் இன்ஸ்பயர் செய்யப்பட்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

2024 duster launch

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையான டஸ்டர் காரின் தோற்றமும் இந்த புதிய அப்டேட்டில் பெரிய அளவில் மாற்றம் பெறாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த காரின் முன் பக்கம் ஸ்டைலான கிரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எல்இடி ஹெட்லைட் ஒய் வடிவ பேட்டனில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக நீள வாக்கிலான ஏர் இன் டேக்குகள் முன்பக்க பம்பரை மாற்றி டிசைன் செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் அக்ரஸிவ் தோற்றத்திற்காக முன்பக்கம் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த காரில் பேனட் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோக வீல் பகுதி சதுர வடிவிலான ஆர்ச்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள டஸ்டர் காரில் இருப்பது போலவே பின்பக்க கண்ணாடி சற்று சாய்வான வகையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பி பில்லர் கருப்பு நிறத்தால் வழங்கப்பட்டுள்ளது.

2024 duster launch

இதுபோக புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் பின்பக்க கருப்பு நிற கிளாடிங் ஆகியன இந்த காருக்கு ஒரு ரக்கட் லுக்கை கொடுக்கிறது. பின்பக்க டெயில் லைட் வி வடிவ ஹைட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. பின்பக்க பம்பர் மற்றும் டெயில் கேட்டும் டிசைன் அப்டேட் செய்யப்பட்டு காட்சியளிக்கிறது. இதுதான் இந்த காரில் வெளிப்புற மாற்றமாக இருக்கிறது. உட்புற மாற்றம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 140 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இது போக 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இஞ்சினும் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 170 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜின் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

2024 duster launch

இது போக 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் ஃபிளக்ஸ் ஃப்யூயல் ஆப்ஷன் உடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் 170 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின்களில் எந்த இன்ஜின் இந்திய மார்க்கெட்டிற்கு வரும் இந்த கார் வரும்போது பொருத்தப்படும் என்ற தெளிவான விபரம் இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ரெனால்ட் டஸ்டர் கார் பல்வேறு மாற்றங்களுடன் கட்டமைக்கப்பட உள்ளன. உட்புற கட்டமைப்பை பொறுத்தவரை பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கனெக்டிவிட்டி ஆப்ஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மாற்றியமைக்கப்பட்ட டேஷ் போர்டு மற்றும் சென்டர் கண்ட்ரோல் புதிய பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஃபிட் மற்றும் ஃபினிஷ் ஆகிய இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 14:10 [IST]
English summary
2024 duster launch all new suv leaked global debut
மேலும்... #ரெனால்ட் #renaul
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X