டாடா, மாருதி எல்லாம் ஓரமா போ! எல்லாரோட பார்வையும் இப்ப டஸ்டர் கார் மேல தான்! அதுல அப்படி என்ன இருக்குது?
மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் சர்வதேச அரங்கில் டேஸிகா நிறுவனத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் வரும் 2025 ஆம் ஆண்டு தான் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த டஸ்டர் கார் இந்தியாவிற்கு வரும்போது அதில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்ற டாப் 5 தகவலை தான் இங்கே காண போகிறோம்.
புதிய தலைமுறை டஸ்டர் கார் அதிகாரப்பூர்வமாக சர்வதேசாரங்கள் அறிமுகமாகிவிட்டது. ரெனால்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டேஸிகா என்ற நிறுவனம் தான் இந்த காரை ஐரோப்பா மார்க்கத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த கார் 2025-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த கார் விற்பனைக்கு வரும்போது அதில் கீழ் காணும் 5 விஷயங்களை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

டிசைன்: புதிய டஸ்டர் கார் இந்தியாவிற்கு வரும்போது இந்தியாவிற்கு ஏத்த மாதிரி டிசைன் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் இருந்த டஸ்டர் காரை விட இது சற்று டிசைன் மாறுபாடு செய்யப்பட்டு வெளியாகும் ஆனால் பார்க்க டஸ்டர் கார் லுக்கிலிருந்து பெரிய அளவில் மாறாத லுக்கில் தான் இருக்கும். தற்போது வெளியாகி உள்ள காருக்கும் இந்தியாவிற்கு வரப்போகும் காருக்கும் நிச்சயம் டிசைன் அளவில் வித்தியாசம் இருக்கும்.
முக்கியமாக இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது ரக்கட் லுக்கிலும் அதே நேரம் சர்வதேச அரங்கில் வெளியாகியுள்ள ஒய் வடிவ டிசைன் அம்சங்கள் மாறாமலும் இந்தியாவில் இந்த கார் மாற்றியமைக்கப்பட்டு புதிய அலாய் வீல்கள் உடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அளவுகள்: சர்வதேச அரங்கில் அறிமுகமான டஸ்டர் கார் 4.34மீட்டர் நீளமும், 1.81மீட்டர் அகலமும், 1.66மீட்டர் உயரமும், 2657மிமீ வீல் பேஸூம் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 4X2 வேரியண்டிற்கு 29 மிமீ அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் சர்வதேச அரங்கில் அறிமுகமான காரிலும் இருக்கிறது. இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது இந்த அளவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
பிளாட்ஃபார்ம் மற்றும் இன்ஜின்: புதிய டஸ்டர் கார் இந்தியாவில் சிஎம்எப்-பி பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் கார்கள் உள்ளே உள்ள பயணிகளுக்கு அதிக இட வசதி இருக்கும்படி வடிவமைக்கப்படுகிறது. அதேநேரம் இந்த பிளாட்பார்மில் பல்வேறு விதமான இன்ஜின்களை பொருத்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது மைல்டு ஹைபிரிட் மற்றும் ஃபுல் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன்களிடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் அதில் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 94 பிஎச்பி பவரை கொண்ட 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும். அது 49 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்ட அந்த சிஸ்டம் எலெக்ட்ரிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட ஹைபிரிட் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் ஆக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 48 ஓல்டு மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட 130 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் காராக விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

உட்புற கட்டமைப்பு மற்றும் வசதிகள்: சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான டேஸிகா நிறுவனத்தின் காரை போல அல்லாமல் இந்திய மார்க்கெட்டிற்கு இந்த கார் வரும்போது சில அம்சங்கள் அப்டேட் செய்யப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக 10.1இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் 7இன்ச் கலர் டிரைவர் டிஸ்பிளே, ஆறு ஸ்பீக்கர் கொண்ட 3டிசவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக்ஏசி, எலெக்ட்ரானிக் பார்க்கிங்பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான இந்த டஸ்டர் காரில் அடாஸ் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் இந்த கார் இந்திய மார்க்கெட் வரும்போது அந்த தொழில்நுட்பம் இருக்குமா இல்லையா என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இதன் உட்புற கட்டமைப்பை பொறுத்தவரை இதன் டேஷ்போர்டு முழுமையாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. அதேபோல உட்புறத்தில் பயன்படுத்தப்பட்ட மெட்டீரியலும் இந்தியாவிற்கு வரும்போது வேறு விதமாக மாற வாய்ப்புகள் உள்ளன.

அறிமுகம்: சர்வதேச அரங்கில் அறிமுகமாகியுள்ள ரெனால்ட் டஸ்டர் கார் இந்திய மார்க்கெட் 2025-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவிற்கு வந்த பின்பு ரெனால்ட்/நிஸான் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி இந்த டஸ்டர் கார் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு நிஸான் பிராண்டிலும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. இந்த கார் 5/7 சீட்டர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் சர்வதேச அரங்கில் தனது டஸ்டர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த காருக்காக பலர் இந்தியாவில் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் எஸ்யூவி கார்கள் மீது மக்களிடம் ஒரு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது இந்த கார் தான். இந்த காரின் வருகைக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது


Click it and Unblock the Notifications









