மாருதி, டொயோட்டா எல்லாம் சிதறி ஓட போறாங்க! ஹோண்டாவின் இந்த கார் இந்தியாவுக்கு வருதா?

ஹோண்டா நிறுவனம் சர்வதேச அளவில் தனது அக்கார்ட் காரை அப்டேட் செய்து புதிய தலைமுறை அக்கார்ட் காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே ஜப்பானில் விற்பனையாக உள்ளது. இந்த காரில் சிவிடி கியர்பாக்ஸ் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் உலக அளவில் மிக முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமாக இருப்பதால் இந்நிறுவனத்திற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிறுவனம் இந்தியாவில் மிகக் குறைவான கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்தாலும் வருங்காலத்தில் சில முக்கியமான தயாரிப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

honda accord hybrid

இந்தியாவில் இந்நிறுவனம் சமீபத்தில் தான் எலவேட் என்ற புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது இந்த காரின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹோண்டா நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டில் தங்களது காலடித்தடத்தை பதித்துள்ளது. இதற்கிடையில் சர்வதேச அளவில் ஹோண்டா நிறுவனம் தற்போது தனது அக்கார்ட் அப்டேட் செய்து 3ம் தலைமுறை அக்கார்ட் காராக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே இந்த கார் அமெரிக்காவில் அறிமுகமான நிலையில் தற்போது ஜப்பானில் இந்த பதினோராவது தலைமுறை அக்கார்ட் வெறும் ஹைபிரிட் ஆப்ஷன் உடன் மட்டுமே அறிமுகமாகிறது. இந்த காரில் விதவிதமான பெயிண்ட் ஸ்கீம்கள், 18 இன்ச் அலாய் வீல் மற்றும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

honda accord hybrid

இன்ஜினை பொருத்தவரை ஹோண்டா நிறுவனம் 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டாரையும் செல்ஃப் சார்ஜிங் பேட்டரியுடன் இ.எச்இவி சிஸ்டத்தை இணைத்து உருவாக்கியுள்ளது. இந்த இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் சேர்ந்து மொத்தமாக இந்த காருக்கு 184 பிஎஸ் பவரையும் 315 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளது.

இந்த பவர் மற்றும் டார்க் ஹோண்டா சிவிக் ஹைபிரிட் காரின் பவர் மற்றும் டார்க் திறன்தான் இதே சிஸ்டம் தான் புதிய அக்காட் காரிலும் இருப்பதால் இதே பவர் மற்றும் டார்க் திறன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சிஸ்டம் தான் இருக்கிறது.

honda accord hybrid

ஆனால் ஹைபிரிட் அக்கார்ட் காரில் இப்படியான பவர் மற்றும் டார்க் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இந்த கார் பிளக்கின் ஹைப்ரிட் காராக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த காரில் பெட்ரோலும் போட்டுக் கொள்ளலாம் சார்ஜ் ஏற்றுக்கொள்ளலாம் என இரண்டு ஆப்ஷன்களும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை முன் பக்கம் உள்ள சென்டர் கண்ட்ரோலில் வட்டமான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது போக இதில் கிளைமேட் கண்ட்ரோல் ஆப்ஷன், ஆம்பியன்ஸ் லைட் டெம்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்ட பல ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த கார் பல அப்டேட்களை பெற்றுள்ளது.

இதை எல்லாம் கண்ட்ரோல் செய்ய ஒரு டயல் லாக் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த டயல் லாக் ஆப்ஷனை டிரைவர் அவருக்கு தகுந்தார் போல் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இந்த டயல் லாக் ஆப்ஷன் சீனாவில் விற்பனையாகும் அக்கார்ட் காரில் ஏற்கனவே இருந்த ஆப்ஷன் தான்.

இந்த டயல் லாக் பயன்பாட்டில் இல்லாத போது அது அனலாக் கடிகாரமாக செயல்படும் இந்த 2024 ஹோண்டா அக்கார்ட் காரில் 12.3 இன்ச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இதில் கூகுள் ஃபங்ஷன் இன்பில்ட் ஆக வருகிறது. சிறப்பான அப்டேட் உடன் இந்த கார் இருக்கிறது.

டிரைவர் கண்ட்ரோலிற்காக 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கண்ட்ரோல் மற்றும் 11.5 இன்ச் ஹெட்சப் டிஸ்ப்ளே ஆகியன இருக்கிறது. இந்த காரில் ஹோண்டா சென்சிங் 360 அடாஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஜப்பான் மார்க்கெட்டில் இந்த சிஸ்டம் பொருத்தப்பட்டு அறிமுகமாக முதல் கார் இதுதான்.

இந்த கார் வாடிக்கையாளர் வாங்கப்படும்போது ஸ்போர்ட்லைன் மற்றும் டூரிங்லேன் என இரண்டு விதமான பேக்கேஜ்களை தேர்வு செய்யும் ஆப்ஷனை வழங்கி உள்ளது. இந்த பேக்கேஜின்படி அலாய் வீல்கள், பம்பர்கள், சைடு சில்கள், லிப் ஸ்பாய்லர்கள் ரியல் ஆகியன மாறும்படி கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறது. இந்த கார் வரும் டிசம்பர் மாதம் முதல் புக்கிங் துவங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களின் அணிவகுப்பை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக தான் முதன் முதலாக எலிவேட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஹோண்டா அக்கார்ட் காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தியாவில் ஹைபிரிட் கார்களுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் இந்த கார் இந்தியாவிற்கு வர வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்த்து கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் நல்ல மவுசு இருக்கும் நிலையில் இந்த அகார்ட் காரும் இந்தியாவில் நல்ல பெயர் பெற்ற கார் தான். தற்போது இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகமானால் குறைந்த விலையில் ஹைபிரிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் சூழ்நிலை உருவாகும். இதனால் ஹைபிரிட் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு பெருகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 23, 2023, 16:56 [IST]
English summary
2024 honda accord is hybrid only for new model will it come to india
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X