2024 Hyundai Sonata கார் இந்தியாவுக்கு வந்துச்சுன்னா பல கார்களின் மார்கெட் காலியாகிடும்!
தென்கொரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஹூண்டாய், இந்நிறுவனம் தனது மிட்-சைஸ் செடான் காரான சொனாட்டா காரின் 8வது தலைமுறை காரை 2024ம் ஆண்டு மாடல் காராக அறிமுகப்படுத்தவுள்ளது. தென்கொரியத் தலைநகர் சியோலில் நடக்கவுள்ள ஆட்டோ ஷோ நிகழ்ச்சியில் வரும் 30ம் தேதி இந்த காரை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த காரை அந்நிறுவனம் 4 டோர் கூபே காராக வடிவமைத்துள்ளது. இந்த கார் சென்சியஸ் ஸ்போர்ட்டினஸ் டிசைன் பிலாஃஸபியில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சொனாட்டா காரின் வெளிப்புற டிசைனை பொருத்தவரை ஸ்போர்ட்டினஸ் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் என்-லைன் பாடிவடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் நீளமான ஹூட், உயரம் குறைந்த முன்பகுதி, ஃபாஸ்ட்பேக் ரூஃப் லைன் ஆகிய உள்ளது. முன்பக்கம் நீளமான லேஅவுட் உள்ளது. இதில் ஹூண்டாய் சிக்னேச்சர் சீம் லெஸ் ஹாரிசான் லேம்ப் உள்ளது. ஹெட்லைட்டிற்கு அருகே நீளமான கிரில் வசதி இருக்கிறது. அதில் அதிக ஏர் இன்டேக் நடக்கும். இது பார்க்க டைனமிக் மற்றும் அக்ரஷிவ் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பின்புறத்தைப் பொருத்தவரை வழக்கமான செடான் காரில் உள்ள ஸ்பாய்லர் வடிவ டிரங்க் லெட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மஃப்லர் வடிவ பின்பக்க மாடல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் என்-லைனில் 19 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ட்வின் டிப் மஃப்லர்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை பானோரமிக் கர்வடு டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் டிரைவருக்கான 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல் மற்றும்
இன்ச் ஏவிஎன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக டச் டைப் கிளைமேட் கண்ட்ரோல் யூனிட் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுடன் வழங்கப்பட்டுள்ளது. இது ஹைடெக் வைப்பை வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் உட்புற கலர் தேர்வால் பல மேம்பாடுகளைச் செய்துள்ளது. முக்கியமாக வாடிக்கையாளர்களின் அனுபவங்களைக் கேட்டு அவர்களின் டேஸ்டிற்கு இந்த காரின் இன்டீரியர் கலர் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டினஸ் மற்றும் பிரிமியம் ஆகிய அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த கலர் இருக்கிறது.
இந்த காரின் சென்டர் கன்சோலை பொருத்தவரை முக்கிய அம்சமாக பாம் ரெஸ்ட் பகுதி இருக்கிறது. இது டிரைவருக்கு சிறப்பான ஒரு பயனைத் தரும். இது போகப் பெரிய கப் ஹோல்டர் மற்றும் ட்ரே ஆகிய உள்ளன. இது பயணிகளுக்கு அதிக பிராக்டிகாலிட்டியை வழங்கும்.
இந்த கார் இந்தியாவிற்கு வருமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த கார் இந்தியாவிற்கு வந்தால் செடான் செக்மெண்டில் உள்ள ஹோண்டா சிட்டி அமேஸ் ஆகிய கார்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படலாம். ஆனால் ஹூண்டாய் ஏற்கனவே வெர்னா காரை இதே செக்மெண்டில் விற்பனை செய்து வருவதால் இந்த காரை இந்தியாவிற்குக் கொண்டுவர வாய்ப்புகள் குறைவு தான்.


Click it and Unblock the Notifications