யாருமே எதிர்பார்க்காத சம்பவத்தை செய்த கியா! டீசரில் வெளியான முக்கிய அப்டேட்!
டிசம்பர் 14-ம் தேதி அறிமுகமாக போகும் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட் காரில் அடாஸ் தொழில்நுட்பம் இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இந்த கேள்வி பல நாட்களாக மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது இது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இந்த அடாஸ் தொழில்நுட்பத்தில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கின்றன என்ற விரிவான விபரத்தை கீழே காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் தனது சோனட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தப் போவதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த காரின் வருகைக்காக இந்தியாவில் மக்கள் பலர் ஆர்வமாக காத்திருந்தார்கள். ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த கார் வரும் 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கியா நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அதில் முக்கியமான ஒரு அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இந்நிறுவனம் புதிதாக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் குறித்த சில முக்கியமான அப்டேட்டும், உட்புறத்தில் சில மாற்றங்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது. இதில் இந்த காரில் அடாஸ் தொழில்நுட்பம் இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த அடாஸ் தொழில்நுட்பத்தில் கொலிஷன் வார்னிங் சிஸ்டம் இருக்கிறது. அடாஸ் தொழிற்நுட்பம் என்றால் டிரைவருக்கு உதவுவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை பெறுவதன் மூலம் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் இந்த தொழில்நுட்பத்தை பெரும் இரண்டாவது காராக இந்த கார் இருக்கிறது. இந்த காரின் டாப் வேரியண்டில் மட்டும்தான் இது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் பார்வேர்டு கொலிஷன் வார்னிங், லேன்ட் கீப்பிங் அசிஸ்ட், லேண்ட் டிபார்ச்சர் வார்னிங், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ஹைபிம் அசிஸ்ட், லீடிங் வெஹிகிள் டிபார்ச்சர் அலெர்ட், ஆகிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக ஏற்பட்டுள்ளது.
இந்த காரின் முன் பக்கத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெக்ஸகன் வடிவிலான கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக ஷார்ப்பான ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக சி வடிவ எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரிய ஏர் இன்டேக் வசதி இருக்கிறது. இதில் புதிய எல்இடி பாக் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரின் பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்பக்கம் சி வடிவ எல்இடி டெய்ல் லைட் வழங்கப்பட்டுள்ளது. இது லைட் பாருடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது. மேலும் இந்த காரின் பின்பக்கமும் புதிய பம்பர் வடிவமைப்பு சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உட்பகுதியில் புளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. எப்படி கியா செல்டோஸ் காரரில் இருக்கிறதோ அதே போலவே இதிலும் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியுடன் இருக்கிறது. இதுபோக செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள முக்கிய அம்சங்களாக 360 டிகிரி கேமரா சிஸ்டம், ஏர் பியூரிஃபையர், இன்கார் கனெக்டட் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், சிங்கிள் பேன் பனரோமிக் சன் ரூஃப், வெண்டிலேட் டிரைவர் மற்றும் முன்பக்க சீட்டுகள், க்ரூஸ் கண்ட்ரோல் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், போஸ் ஆடியோ சிஸ்டம், பார்க்கிங் சென்சார், ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு சீட் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெறுகின்றன. இந்த இன்ஜின்கள் ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த காரை வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது இந்த காருக்கான அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் கியா ஷோரூம்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த காரை வாங்க விரும்பினால் இப்பொழுதே கியா ஷோரூமை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இனி வரப்போகும் கார்களில் அடாஸ் தொழில்நுட்பம் மிக முக்கியமான அம்சமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்களின் பாதுகாப்பிற்காக அடாஸ் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இனி வெளியாகும் கார்களில் அடார் தொழில்நுட்பம் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அந்த அம்சம் இந்த காரிலும் இடம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications









