கியா பக்கம் போவதா? (அ) ஹூண்டாய் பக்கம் போவதா? இரண்டும் கொரியன்-ஸ்டைல் கார் தான்!!

கியா (Kia) நிறுவனம் அதன் புதிய 2024 சொனெட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை சமீபத்தில் இந்தியாவில் வெளியீடு செய்தது. இதனை தொடர்ந்து இந்த கார் வருகிற 2024 ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனையில் இந்த தென்கொரிய காருக்கு மற்றொரு தென்கொரிய-ஸ்டைல் காரான வென்யூ முக்கிய போட்டியாக விளங்கவுள்ளது. வென்யூ உடன் ஒப்பிடுகையில், 2024 சொனெட் காரில் கிடைக்கும் 8 வசதிகளை இனி பார்க்கலாம்.

ஓட்டுனருக்கான முழு டிஜிட்டல் திரை: இந்த 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் 10.25 இன்ச்சில் டிஜிட்டல் தரத்தில் டிரைவருக்கு தகவல்களை வழங்கக்கூடிய திரையை கியா அறிமுகப்படுத்தியது. அதே திரை சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஹூண்டாய் வென்யூ காரில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தான் கொடுக்கப்படுகிறது.

2024 kia sonet facelift features

360-டிகிரி கேமரா: புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரில் 360-டிகிரி கேமரா மூலமாக ப்ளைண்ட் ஸ்பாட்டை மானிடர் செய்ய முடியும். அதாவது, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி ஆகும். இந்த வசதி 2024 சொனெட் காரின் உயர்நிலை வேரியண்ட்களான ஜிடிஎக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைனில் மட்டும் கிடைக்கவுள்ளன.

2024 kia sonet facelift features

முன் பார்க்கிங் சென்சார்கள்: சொனெட் கார் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட புதியதில் இருந்தே வழக்கப்பட்டு வரும் ஒரு தொழிற்நுட்பம். 2024 ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்துள்ளது. காரை ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக மட்டுமல்ல, முன்பக்கமாக பார்க் செய்வதற்கும் உதவி கிடைக்கிறது. சொனெட் காரில் மத்திய-நிலை வேரியண்ட்டான எச்.டி.கே -இல் இருந்து இது கிடைக்கிறது. ஆனால், வென்யூவில் அனைத்து வேரியண்ட்களிலும் ரிவர்ஸ் பார்க்கிங் உதவி மட்டுமே கிடைக்கிறது.

2024 kia sonet facelift features

பெரிய டச் ஸ்க்ரீன்: 2019இல் வென்யூ அறிமுகம் செய்யப்பட்ட புதியதில் அதில் வழங்கப்பட்டு இருந்த 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதில் இப்போது வரையில் வென்யூவில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்டேட் ஆகவில்லை. ஆனால், இதன் ட்வின் பிரதர் கியா சொனெட் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீனை பெற்றுள்ளது.

2024 kia sonet facelift features

வெண்டிலேட்டட் முன் இருக்கைகள்: இந்தியாவில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் இன்னும் எதிலிலும் வராத வசதி. 2024 சொனெட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விலையுயர்ந்த எச்.டி.எக்ஸ்+ வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கவுள்ளது. மறுப்பக்கம், ஹூண்டாய் வென்யூவில் எந்த வேரியண்ட்டிலும் இத்தகைய முன் இருக்கைகள் கிடைப்பதில்லை.

2024 kia sonet facelift features

டீசல்-ஆட்டோ காம்போ: டீசல் என்ஜின் உடன் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் ஒரேயொரு மாடல் கியா சொனெட் எனலாம். ஹூண்டாய் வென்யூ காரிலும் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது என்றாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைப்பதில்லை. டீசல்-ஆட்டோ ஆப்ஷனில் கியா சொனெட் கார் மத்திய-நிலை எச்.டி.எக்ஸ் மற்றும் டாப் ஜிடிஎக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

2024 kia sonet facelift features

ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள்: வென்யூ உடன் ஒப்பிடுகையில், 2024 சொனெட் கார் பெற்றிருக்கும் மற்றொரு ஹைலைட்டான அம்சம் அனைத்து 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகும். அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் வழங்கப்படுவதால், டிரைவிங்கின் போது கூடுதல் கண்ட்ரோல் கிடைக்கும். 2024 சொனெட் காரில் அனைத்து சக்கரங்களில் டிஸ்க் பிரேக் ஆனது டாப் எச்டிஎக்ஸ்+ வேரியண்ட்டில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

2024 kia sonet facelift features

7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம்: கியா சொனெட் காரில் 7-ஸ்பீக்கர் போஸ் மியுசிக் சிஸ்டம் ஆனது ஆரம்பத்தில் இருந்தே வழங்கப்படுகிறது. அத்துடன், கூடுதல் ஸ்பீக்கர் மற்றும் எல்இடி மூட் லைடிங்குகளையும் வென்யூ உடன் ஒப்பிடுகையில் சொனெட் கூடுதலாக பெற்றுள்ளது. கேபின் மூட் லைட்கள் இசைக்கப்படும் பாடலுக்கு ஏற்ற நிறத்திலான விளக்குகளை வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, 2024 சொனெட் கார் 8 மோனோடோன் மற்றும் 2 ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் கிடைக்கவுள்ளது. ஆனால், வென்யூ கார் 6 விதமான மோனோடோன் மற்றும் ஒரேயொரு ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. ஆக மொத்தத்தில், விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் வென்யூ காரை விட விரைவில் விற்பனைக்குவர உள்ள 2024 கியா சொனெட் கார் அனைத்து விதங்களிலும் சிறப்பானதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2023, 10:18 [IST]
English summary
2024 kia sonet facelift features over hyundai venue check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X