புது கியா சொனெட் காரின் டிசைன் வேற லெவல்!! அறிமுக தேதியை இப்போவே குறித்து வெச்சிக்கோங்க!
2023 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift) காரின் இந்திய அறிமுகம் எப்போது இருக்கும்? என்பது குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றியும், புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
தென்கொரிய கார் நிறுவனமான கியா இந்தியாவில் செல்டோஸ் காருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் கார் சொனெட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி ஆகும். இருப்பினும், 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொனெட் காரை இன்னமும் கியா நிறுவனம் இந்தியாவில் அப்டேட் செய்யவில்லை. இந்த நிலையில்தான், புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

புதிய கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் சாலை ஒன்றில் மறைப்புகளுடன் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால், புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் விரைவில் வெளியீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, இந்திய மார்க்கெட்டிற்கான புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். ஆனால் அதனை தொடர்ந்து, புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை கியா நிறுவனம் அடுத்த 2024ஆம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

புதிய கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரையில், இந்த காரில் அப்டேட்கள் காரின் உட்பக்கம், வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் கொண்டுவரப்பட உள்ளன. புதிய சொனெட் காரின் முன்பக்கத்தில் ரீடிசைனில் க்ரில், அப்டேட்டான ஹெட்லைட் க்ளஸ்ட்டர், புதிய எல்இடி டி.ஆர்.எல்-கள், ரீஸ்டைல்டு ஃபாக் விளக்குகள் மற்றும் அகலமான ஏர் இண்டேக் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.
இவற்றுடன், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள், புதிய பாடி கிளாடிங், கனெக்டட் எல்இடி டெயில்லேம்ப்கள், திருத்தப்பட்ட வடிவில் பம்பர் & டெயில்கேட் போன்றவற்றையும் புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கிறோம். மேலும், சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு புதிய பெயிண்ட் ஆப்ஷன்களையும் கியா வழங்கும் என கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்புதான், வெளிநாட்டு சந்தைகளுக்கான கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும் சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் அதில் இருந்து வித்தியாசமான டிசைனை கொண்டிருக்கும். காருக்கு உள்ளே அப்டேட்டான டேஸ்போர்டு, செண்டர் கன்சோல், புதிய கண்ட்ரோல்கள் மற்றும் சர்ஃபேஸ் ஃபினிஷிங்குகள் பிரீமியம் டச்-க்காக வழங்கப்படும்.
அத்துடன், செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்டதை போல் புதிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை சொனெட் ஃபேஸ்லிஃப்ட்டிலும் கியா வழங்கும். விலைமிக்க டாப் வேரியண்ட்கள் ஹூண்டாய் வென்யூ காரை போலவே அடாஸ் உடன் விற்பனை செய்யப்படலாம். மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்டோஸிற்கு அடுத்து கியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார் என கூறினாலும், சொனெட்டின் விற்பனை எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. ஆதலால், இந்தியாவில் சொனெட் எஸ்யூவி காரை கியா நிறுவனம் அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன்படி பார்த்தால், 2024 ஜனவரி மாதத்தில் சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது தாமதமே ஆகும்.


Click it and Unblock the Notifications








