கியா ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து உருவாக்கி இருக்கு!! புது சொனெட் காரை வாங்க ரெடியாகுங்க!!

2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (2024 Kia Sonet Facelift) கார் இந்தியாவில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த கார் வருகிற ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கியா சொனெட் காரின் சிறப்பம்சங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவில் அதன் புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை இன்று (டிசம்பர் 14) வெளியீடு செய்துள்ளது. கியா சொனெட் காரின் 2024ஆம் ஆண்டிற்கான வெர்சனான இது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலம் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

2024 kia sonet unveiled

கியா நிறுவனம் சொனெட் காரை முதன்முதலாக 2020 செப்டம்பர் மாதத்தில் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் இத்தனை வருடங்களில் சிறு, சிறு அப்டேட்கள் சொனெட் காருக்கு வழங்கப்பட்டாலும், இதுதான் இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு வழங்கப்பட்டுள்ள மிக பெரிய மற்றும் முக்கியமான அப்டேட்டாக பார்க்கப் படுகிறது.

புதிய சொனெட் காரில் மிக முக்கிய அம்சமாக 10 அட்வான்ஸ்டு டெக்னாலஜி வசதிகளை கொண்ட அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிய சொனெட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சமாக 6 ஏர்பேக்குகளை வழங்க கியா முடிவெடுத்துள்ளது. இதனால், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் புதிய சொனெட் கார் முழு 5 நட்சத்திரங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 kia sonet unveiled

மத்திய அரசாங்கத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கான பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முதலாவதாக உட்படுத்தப்படும் காராக 2024 கியா சொனெட் இருக்கலாம் என கூறப்படுகிறது. அடாஸ், 6 ஏர்பேக்குகள் மட்டுமின்றி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா மற்றும் டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டத்தையும் 2024 சொனெட் கொண்டுள்ளது.

இவற்றின் உதவியுடன், புதிய சொனெட் காரில் பராமரிப்பு செலவு பெரியதாக இருக்காது என்று கியா அடித்துக் கூறுகிறது. விற்பனையில் போட்டியாக இருக்கும் மற்ற கார்களை காட்டிலும் சொனெட் டீசல் கார் 14% குறைந்த பராமரிப்பு செலவையும், சொனெட் பெட்ரோல் கார் 16% குறைந்த பராமரிப்பு செலவையும் மட்டுமே வழங்கும் என்கிறது கியா நிறுவனம்.

2024 kia sonet unveiled

புதிய சொனெட் காரை மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கலாம். இதில் ஒன்று, 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆகும். 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என்பன மற்ற இரு என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும். டிசம்பர் 20ஆம் தேதியில் இருந்து சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை ப்ரீ-புக்கிங்ஸ் செய்துக் கொள்ளலாம். இதற்கான புக்கிங் தொகையாக ரூ.25,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2024 ஜனவரியில் கார் அறிமுகம் செய்யப்படும்போது, விலைகள் அறிவிக்கப்படும்.

2024 kia sonet unveiled

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போன்ற பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்குவதால், சொனெட் காரை கியா நிறுவனம் மேலும் மெருக்கேற்றி உள்ளது. அத்துடன், அடாஸ் போன்ற மாடர்ன் டெக்னாலஜியையும் கியா வழங்கியுள்ளது. கார் இப்போது வெளியீடு செய்யப்பட்டாலும், முன்பதிவு செய்வதற்கு இன்னும் 6 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என நீங்கள் நினைப்பது புரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 13:18 [IST]
English summary
2024 kia sonet facelift unveiled new features launch date check all details here
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X