40 கிமீ மைலேஜ், 400 கி.மீ ரேஞ்ச் என 2024-ஐ கலக்கப்போகும் மாருதியின் முக்கியமான 3 கார்கள் இவை தான்!
2023-ம் ஆண்டில் ஜிம்னி மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகிய இரண்டு கார்களை மிகப்பெரிய அளவில் யாரும் எதிர்பாராத வகையில் அறிமுகப்படுத்தி இந்திய ஆட்டோமொபைல் சந்தையை புரட்டி போட்ட மாருதி நிறுவனம் 2024-ம் ஆண்டிலும் இப்படியான மிகப் பெரிய புரட்சியை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் 2024-ம் ஆண்டு வெளியிடப் போகும் கார்கள் பற்றிய விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
2024-ம் ஆண்டு மாருதி நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை முழுவதுமாக தன் வசம் ஈர்க்க மூன்று புதிய கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார்களையும் அதே நேரம் மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரக இவிஎக்ஸ் என்ற காரையும் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸூகி ஸ்விப்ட் : ஸ்விஃப்ட் டிசையர் காரின் 4ம் தலைமுறை கார் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகமாகிவிட்டது. மேலும் இந்த கார் இந்தியாவில் ஆங்காங்கே டெஸ்ட் செய்யப்படுவதையும் நம்மால் காண முடிகிறது. இந்த காரின் வெளிப்புறத்திலும் உள்புறத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்படுகிறது. முக்கியமாக இதன் இன்ஜின் மாற்றியமைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த கார்களின் உள்ள வெளிப்புறத் தோற்றத்தில் புதிய கிரில், மாற்றி அமைக்கப்பட்ட பம்பர், மற்றும் லைட்டிங் ஆகியவைகளும் இந்த காரின் உட்புறத்தில் 9 இன்ச் அளவிலான டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக ஆம்பியன்ஸ் லைட்டிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சென்ட்ரலைஸ்டு ஏசி மற்றும் புதிய டேஷ்போர்டு டிசைன் ஆகியன இடம் பெற உள்ளன.

இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது ஹைபிரிட் மற்றும் ஹைபிரிட் இல்லாத வகை ஆகிய இரண்டு வெர்ஷனாக உருவாக்கப்பட உள்ளது. என்எம் டார்க் திறனுடன் இந்த கார் 22.38 கிலோ மீட்டர் மைலேஜ் மேனுவல் கியரில் கிடைக்கும்.
அதே போல 22.56 கிலோ மீட்டர் மைலேஜ் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காரில் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூபாய் 6 லட்சம் முதல் 9 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸூகி டிசையர்: இந்த கார் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரை போலவே அப்டேட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அரேனா டீலர் ஷிப்கள் வழியாக விற்பனைக்கு வர உள்ளன. இந்த காரின் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் எல்லாம் புதிய ஸ்விஃப்ட் காரில் எப்படி இருக்கிறதோ அதேபோல இந்த காரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரில் மிகப்பெரிய பூட்ஸ் ஸ்பேஸ் வசதியும் இடம்பெறும்.
இதன் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்டராங் ஹைபிரிட் வேரியன்ட் வெளியாகுமா இல்லையா என்ற விவரம் இந்த காரின் அறிமுகத்தின் போது தான் தெரியவரும்.
அதுவரை இந்த தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. இந்த காரின் விலையைப் பொறுத்தவரை மார்க்கெட்டிற்கு இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூபாய் 7 முதல் ரூபாய் 9.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது ஒரு உத்தேச யூகம் தான் விற்பனைக்கு வரும் போது விலையில் மாறுபாடு இருக்கலாம்.
மாருதி சுசுகி இவிஎக்ஸ்: மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் என்ற காரை இந்தியாவில் களம் இறக்க உள்ளது. இதன் கான்செப்ட் வெர்ஷனை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. இதன் புரொடெக்ஷன் வெர்ஷவ் கார் 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு மிட் சைஸ் எஸ்யூவி காராக இருக்கிறது.
இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன முக்கியமாக பவர் சீட்டுகள், 360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக், பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், அடாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்டவை உள்ளன. இந்த கார் 48 கிலோ வாட் ஹவர் மற்றும் 60 கிலோ வாட் ஹவர் என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இது சிங்கிள் சார்ஜில் 400 முதல் 450 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் போகும் கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் இப்பொழுதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கார்களாக இருக்கிறது. முக்கியமாக 40 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் கார் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் 2024-ம் ஆண்டு ஆட்டோ மொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படப்போவது உறுதியாகிறது.


Click it and Unblock the Notifications









