40 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் கார் விலை இவ்ளோதானா! ஷோரூம்ல இப்பவே பாயை விரிச்சு படுத்தற வேண்டியதுதான்!

2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (2024 Maruti Suzuki Swift) கார் வெகு சமீபத்தில் ஜப்பானில் வைத்து வெளியிடப்பட்டது. வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக ஜப்பானில் இந்த கார் என்னென்ன கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும் என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கேரவன் ஐவரி பியர்ல் மெட்டாலிக், ப்யூர் ஒயிட் பேர்ல், பிரீமியம் சில்வர் மெட்டாலிக், ஸ்டார் சில்வர் மெட்டாலிக், சூப்பர் பிளாக் பியர்ல், பர்னிங் ரெட் பியர்ல் மெட்டாலிக், ஃப்ளேம் ஆரஞ்ச் பியர்ல் மெட்டாலிக், கூல் யெல்லோ மெட்டாலிக், ஃப்ரண்டியர் ப்ளூ மெட்டாலிக் என மொத்தம் 9 ஆப்ஷன்களில் இந்த கார் ஜப்பானில் கிடைக்கும்.

2024 Maruti Suzuki Swift Burning Red Pearl Metallic

இதே கலர் ஆப்ஷன்கள் இந்திய சந்தையிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 7 சிங்கிள் டோன் கலர்கள் மற்றும் 3 ட்யூயல் டோன் கலர்கள் என மொத்தம் 10 கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் தற்போது, 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 89 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

2024 Maruti Suzuki Swift Caravan Ivory Pearl Metallic

ஆனால் 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) தொழில்நுட்பத்துடன் கூடிய புத்தம் புதிய இஸட்-சீரிஸ் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 40 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதிக மைலேஜ் வழங்க கூடிய புதிய இன்ஜின் உடன் பல்வேறு வசதிகளும் (Features), 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ள இந்திய வாடிக்கையாளர்கள், 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் வருகைக்காக காத்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 14:03 [IST]
English summary
2024 maruti suzuki swift colour options revealed all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+