எல்லாரும் சொல்ற மாதிரி புதிய ஸ்விஃப்ட் 40 கிமீ மைலேஜைதான் தரபோகுதா!.. புதிய தகவல்கள் என்ன சொல்லுது?
புதிய ஸ்விஃப்ட் பற்றிதான் இப்போது ஊரு முழுக்க பேச்சாக இருக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டருக்கே 35 கிமீ முதல் 40 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்றும், இந்த சூப்பரான மைலேஜ் திறனுக்காக அந்த காரில் சுஸுகி நிறுவனம் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை சுஸுகி வழங்க இருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க, புதிய ஸ்விஃப்ட் புதிய தலைமுறை வாகனமாகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த கார் மிக மிக தரமானதாக இருக்கும் என்று நாம்மாலேயே யூகிக்க முடிகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே, இந்த கார் இவ்வளவு மைலேஜ் தரும் என புதிய தகவல் ஒன்று வெளியாகிய அனைவருக்கும் ஷாக் வைத்தியத்தை அளித்திருக்கின்றது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவலானது 2024 ஆம் ஆண்டில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படும் நான்காம் தலைமுறை புதிய ஸ்விஃப்ட் கார், ஒரு லிட்டருக்கு 23.40 கிமீ முதல் 24.50 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்கும் என தெரிவிக்கின்றது. இந்த தகவலை கார்வேல் தனது செய்தியின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இந்த தகவல் ஸ்விஃப்ட் கார் பிரியர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. புதிய ஸ்விஃப்ட் ஒரு லிட்டருக்கே 35 கிமீ முதல் 40 கிமீ வரையில் மைலேஜ் தரும் என அனைவராலும் நம்பப்பட்டு வந்தநிலையில், புதிய தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படும் ஹைபிரிட் சிஸ்டமானது மிக மிக அதிக மைலேஜ் தரும் என பலராலும் நம்பப்பட்டது. ஆனால், ஹைபிரிட் அம்சம் கொண்ட ஸ்விஃப்ட் வெறும் 24.50 கிமீ மைலேஜையும், ஹைபிரிட் அல்லாத ஸ்விஃப்ட் 23.40 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் முரண்பாடானதாக இருக்கின்றது. அதேவேளையில், இந்த ஸ்விஃப்ட் காரில் அடுத்த ஆண்டு புதிய ஸ்போர்ட்ஸ் எனும் வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஒரு வேளை தற்போது வெளியாகி இருக்கும் மைலேஜ் விபரங்கள் புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காருடையதாக இருக்குமோ என்றும் நினைக்கச் செய்திருக்கின்றது.

இருப்பினும் இந்த தகவல் எந்த வெர்ஷனின் மைலேஜ் திறன் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 2024 ஸ்விஃப்ட் காரில் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர், இசட்12இ வகை எஞ்சினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எஞ்சின் என்ன மாதிரியான திறனை வெளியேற்றும் என்பது அறிவிக்கப்படவில்லை.
விரைவில் இதுகுறித்த விபரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பார்ப்புகளின்படி இந்த புதிய எஞ்சின் 100 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றலாம். இத்துடன், சிவிடி கியர்பாக்ஸ் யூனிட்டும் இந்த காருடன் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர், டூயல்ஜெட் பெட்ரோல் மோட்டாரே பன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டாரின் மேனுவல் வெர்ஷன் 22.56 கிமீ மைலேஜையும், ஏஎம்டி வேரியண்ட் 22.38 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்விஃப்ட் மட்டுமல்ல அடுத்த ஆண்டில் புதிய டிசையரும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதிலும், ஹைபிரிட் அம்சத்தை மாருதி சுஸுகி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஸ்விஃப்ட் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆட்டோ ஷோ ஒன்றில் சுஸுகி வெளியீடு செய்தது. முழுமையாக உற்பத்திக்கு தயாரான மாடலையே அது வெளியீடு செய்தது. உலக அளவில் இந்த கார் 2024 ஆம் ஆண்டில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









