அடுத்த வருசம் கார் வாங்குற ஐடியால இருந்தா இதை கொஞ்சம் செக் பண்ணுங்க! கண்டிப்பா ஒன்ன வாங்கிடுவீங்க!
2024 ஆம் ஆண்டு குறிவைத்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது முக்கிய தயாரிப்புகளை களம் இறக்க தயாராகி வருகின்றனர். அப்படியாக அடுத்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்களை பற்றி இங்கே காணலாம்.
2024 ஆம் புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு மாத காலமே இருக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளையும் அப்டேட் செய்யப்பட்ட தயாரிப்புகளையும் களம் இறக்க உள்ளன. அதன்படி 2024-ம் ஆண்டு அறிமுகமாக உள்ள முக்கியமான சில வாகனங்களை பற்றி காணலாம்.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: ஹூண்டாய் நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் மிட் சைஸ் எஸ்யூவி கார் இந்த ஹூண்டாய் கரெக்டா கார். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் 2024-ம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் மாற்றங்கள் எல்லாம் பாலிசைடு எஸ்யூவி காரிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது.
முக்கியமாக நீளவாக்கிலான ஹெட்லைட் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கிரில் இந்த காரின் முக்கிய அப்டேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரில் 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய தொழில்நுட்ப அம்சமாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படலாம். இந்த காரில் உள்ள மூன்று இன்ஜின் ஆப்ஷன் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் 5 டோர்: மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமான காராக இருக்கிறது. இந்த காரின் 5 டோர் வெர்ஷன் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த ஸ்பை புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
இந்த காரில் எல்இடி ஹெட்லைட் எல்இடி டிஆர்எல் சிங்கிள்பேன் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டு தற்போது உள்ள 3டோர் காரை விட அதிக பிரிமியம் வசதி கொண்ட உட்புறத்தை கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.2லிட்டர் டர்போடீசல் மற்றும் 2.0லிட்டர் டர்போபெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கியர் பாக்ஸ் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

புதிய தலைமுறை ஸ்விஃப்ட்: சுஸூகி நிறுவனம் இன்று சர்வதேச அரங்கில் தனது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாக புதிய ஹெட்லைட்டுகள், மாற்றி அமைக்கப்பட்ட கிரில், வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ள டோர் ஹேண்டில்கள் என மினி கூப்பர் காரை அதிகம் இன்ஸ்பெக்டர் செய்யப்பட்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முக்கியமாக இந்த கார் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த காரின் மைலேஜ் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. லிட்டருக்கு 40 கி.மீ வரை மைலேஜ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை டிசையர்: மாருதி நிறுவனம் தனது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது தனது டிசையர் காரையும் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தும் எனது பார்க்கலாம். ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன் மற்றும் ஹைபிரிட் ஆப்ஷன் ஆகியவை இந்த டிசையர் காரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியாவில் கார்களின் மைலேஜில் பெரும் புரட்சியே ஏற்படலாம். இதில் ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியன்ட் காரர்கள் அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் நீடித்த உழைப்புக்கு பெயர் போன கார்கள். அப்டேட் செய்யப்பட்டு வரும் கார்களும் இதே பாரம்பரியத்தை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டாடா கர்வ் கூபே எஸ்யூவி: டாடா நிறுவனம் தனது கர்வ் காரை கூப்பே ஸ்டைல் எஸ்யூவி காராக இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த கார் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் இன்ஜின் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 2024 ஆம் ஆண்டு முதல் பாதியிலேயே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜில் 500 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகியவை இன்ஜின் ஆப்ஷன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கிய ஆண்டாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை வளர்ச்சி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் நீங்கள் கார் வாங்கினால் எந்த காரை வாங்குவீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









