விற்பனையை நிறுத்தீட்டாங்கதான்! ஆனா அங்கதான் ஒரு ட்விஸ்ட் இருக்கு! மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு செம செக்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதன் உற்பத்தி மற்றும் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது.

எனினும் டஸ்டர் காரின் புதிய தலைமுறை (New Generation) ரெனால்ட் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிபடுத்தும் வகையில், ரெனால்ட் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடல் வெளிநாடுகளில் தற்போது சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

Renault Duster

இந்திய சந்தையில் 6 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ரெனால்ட்-நிஸான் (Renault-Nissan) கூட்டணி வெகு சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒன்றாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் குறித்து யூகங்கள் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிஎம்எஃப்-பி (CMF-B) பிளாட்பார்ம் அடிப்படையில் 2024 ரெனால்ட் டஸ்டர் கார் கட்டமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசி இன்ஜின் (ICE - Internal Combustion Engine) மற்றும் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Renault Duster

இந்த காரின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்களில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதுதவிர இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்ப வசதியையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் பெற்றிருக்கலாம்.

மேலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் ஆகிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அனேகமாக அடுத்த ஆண்டு (2024) தொடக்கத்தில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு இது விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

மேலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும். எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், மேற்கண்ட போட்டி மாடல்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Friday, March 31, 2023, 23:00 [IST]
English summary
2024 renault duster suv india launch details
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+