எல்லாரும் இந்த காரை வாங்குறதே அதுக்காக தான்!! அதுவே இல்லை என்றால் எப்படி? ரெனால்ட் எடுக்கும் அதிரடி முடிவு!

ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரில் விரைவில் சன்ரூஃப் அம்சம் நீக்கப்பட உள்ளதாக ஓர் அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்த அதிரடி நடவடிக்கை? சன்ரூஃப் நீக்கப்படுவதால் காரின் விலை குறையுமா என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் ஓரளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மிகவும் சில கார்களுள் ஒன்று டஸ்டர் ஆகும். இந்த நிலையில், மிக விரைவில் சர்வதேச அளவில் ரெனால்ட் டஸ்டர் கார் அப்டேட் செய்யப்பட உள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற நவம்பர் 29ஆம் தேதி புதிய டஸ்டர் வெளியீடு செய்யப்பட உள்ளது.

2024 renault duster without sunroof

இதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்கள், புதிய டஸ்டரை பற்றி பல்வேறு விபரங்களை வெளிக்காட்டி உள்ளன. குறிப்பாக, காரின் டாப்-ஆங்கிள் படத்தில், காரில் சன்ரூஃப் இல்லாததை பார்க்க முடிகிறது. அதாவது, புதிய டஸ்டர் சன்ரூஃப் இல்லாமல் வருகிறதாம்.

இந்த காப்புரிமை படங்கள், சர்வதேச சந்தையில் விற்பனைக்குவரும் புதிய ரெனால்ட் டஸ்டரின் தோற்றத்தை வெளிக்காட்டுவதாக உள்ளன. இருப்பினும், இதே தோற்றத்திலான ரெனால்ட் டஸ்டர் கார் தான் இந்தியாவிலும் அடுத்த வருடத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய காலத்தில், சன்ரூஃப் உடன் கார்களை வாங்குவது சவுகரியமான விஷயம் என்பதை தாண்டி, கௌரவமான விஷயமாக மாறி உள்ளன.

2024 renault duster without sunroof

இதனாலேயே, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி அஸ்டர், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற ரெனால்ட் டஸ்டருக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் கார்களில் எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ தாண்டி, விலைமிக்க பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகின்றது. ஆனால் மறுப்பக்கம், டஸ்டரில் இருந்து சன்ரூஃப் நீக்கப்படுகிறது.

சன்ரூஃப் நீக்கப்பட்டு இருப்பதுடன், 2024 ரெனால்ட் டஸ்டர் காரில் வெளிப்பக்க தோற்றத்தில் பல்வேறு மாற்றங்களை தற்போது நமக்கு கிடைத்துள்ள காப்புரிமை படங்களில் காணலாம். இதற்கு ஏற்ப காரின் உட்பக்க கேபினிலும் ஏகப்பட்ட திருத்தம் செய்யப்படலாம். மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் கார் இந்தியாவில் வருகிற 2024 இல்லாமல், 2025ஆம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 renault duster without sunroof

வழக்கம்போல், 5 அல்லது 7-இருக்கை ஆப்ஷன்களில் டஸ்டர் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் தற்சமயம் ரெனால்ட் பிராண்டில் இருந்து மொத்தமாகவே வெறும் 3 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. க்விட், டிரைபர் மற்றும் கிகர் என்பன அவை ஆகும். ஆனால், கடந்த வருடம் வரையில் டஸ்டர் எஸ்யூவி காரும் ரெனால்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஒன்றில் இருந்து சன்ரூஃப் அம்சம் நீக்ப்பட்டிருப்பது, ஓர் மதில் மேல் பூனை போன்றதாகும். அதாவது, இந்த அதிரடி நடவடிக்கையால் முடிவு நல்லதாகவும் அமையலாம் அல்லது கெட்டதாகவும் அமையலாம். அதாவது, சன்ரூஃப் இல்லாததினால் ரெனால்ட் காரை வாங்க வரும் நிறைய பேர் டஸ்டரை தேர்வு செய்யாமல் போகலாம். அல்லது, சன்ரூஃப் நீக்கப்பட்டு இருப்பதினால் விலை கணிசமாக குறைக்கப்பட்டால், அதுவே காரின் விற்பனையை தானாக உயர்த்திவிடலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2023, 7:00 [IST]
English summary
2024 renault duster will not be equipped with sunroof check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X