டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வந்த கார் ஒன்று வெறும் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த அதிசயம்! அப்படி என்ன கார்?
டொயோட்டா (Toyota) நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த புதிய கார் மாடல் ஒன்று விற்பனைக்கு வந்த அரை மணி நேரத்திலேயே விற்று தீர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி என்ன கார் மாடலை டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வந்தது? அதன் சிறப்புகள் என்ன? எங்கு இந்த சம்பவம் அரங்கேறியது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) இருக்கின்றது. இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முதல் லாட்டாக சுமார் ஆயிரம் யூனிட்டுகளை அது விற்பனைக்குக் களமிறக்கியது.

இந்த ஆயிரம் யூனிட்டிற்கான விற்பனையே தொடங்கப்பட்ட அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்திருக்கின்றன. இந்த அதிசய நிகழ்வு ஜெர்மன் நாட்டிலேயே அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டில் நடைபெறஅற 20வது புஷ் டாக்சி சந்திப்பின்போதே முதல் முறையாக டொயோட்டா வெளியீடு செய்திருந்தது.
அப்போதே ஜெர்மானியர்களின் எதிர்பார்ப்பை அந்த கார் கவர தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே இக்காரை டொயோட்டா அந்நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த நிகழ்விற்காக வெறிக் கொண்டு காத்திருந்த ஜெர்மானியர்கள் விறுவிறுவென புக்கிங்கைக் கொடுத்து வெறும் அரை மணி நேரத்தில் அத்தனை யூனிட்டுகளையும் வாங்கி தீர்த்திருக்கின்றனர்.

ஆகையால், தற்போது இரண்டாவது லாட்டை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் டொயோட்ட களமிறங்க இருக்கின்றது. தற்போது மிக சிறப்பான வரவேற்பு புதிய லேண்ட் க்ரூஸர் காருக்கு கிடைத்து இருப்பதால் இரண்டாவது லாட்டில் கூடுதல் எண்ணிக்கையில் லேண்ட் க்ரூஸரை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் டொயோட்டா இதுவரை வெளியிடவில்லை. ஆகையால், இரண்டாவது லாட்டை ஜெர்மானியர்களுக்காக எப்போது அது விற்பனைக்கு வழங்கும் என்கிற விபரம் அறியாத ஒன்றாக இருக்கின்றது. அதேவேளையில், இதன் இரண்டாவது லாட்டிற்கு இப்போதே அவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டொயோட்டா நிறுவனம் 1000 யூனிட் 2024 லேண்ட் க்ரூஸருக்கான புக்கிங்கிகை கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி காலை 8 மணிக்கே தொடங்கியது. 8.29-க்குள் அனைத்து ஆயிரம் யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன. மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராக 2024 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதனை டிஎன்ஜிஏ-எஃப் ஆர்கிடெக்சரை பயன்படுத்தியே இந்த காரை டொயோட்டா தயார் செய்திருக்கின்றது. ஜெர்மன் சந்தையில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. எக்சிகியூட்டீவ், டெக் மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் ஆகியவையே அவை ஆகும். இப்போது புக்கிங் கொடுத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலேயே டெலிவரி வழங்கப்பட இருக்கின்றது.
ஆகையால், அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை இந்த காரை கைகளில் பெற வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்கிற சூழலே தற்போது தென்படுகின்றது. அதேவேளையில், விருப்பமுள்ள நபர்கள் இப்போதே இந்த கார்களை ரிசர்வ் செய்துக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை டொயோட்டா வெளியிட்டு இருக்கின்றது.
எனவே, இந்த காருக்கான காத்திருப்பு காலம் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருஷக் கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது போன்ற ஓர் சூழலே அதற்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட வாகனமாக மட்டுமில்லைங்க அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும் டொயோட்டா தயார் செய்திருக்கின்றது.
அந்தவகையில், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், ஹெட்ஸ் அப் திரை, பெரிய திரை, பன்முக கன்ட்ரோல் பொத்தான்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், அதிக மிருதுவான இருக்கை, பிரீமியம் இன்டீரியர் மற்றும் டேஷ்போர்டு ஆகியவற்றை 2024 லேண்ட் க்ரூஸர் தாங்கி இருக்கின்றது. இத்துடன், 20 அங்குல அலாய் வீல், டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர் உள்ளிட்டவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. லேண்ட் க்ரூஸர் 300 வெர்ஷனே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 2.10 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காருக்கான புக்கிங்கும் இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








